வியாழன், 7 ஜூன், 2012

இன்னும் 5 ஆண்டுகளில் facebook மறையப்போகிறதா?

இன்று இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் தெரிந்த மற்றும் பயன்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருப்பது facebook  எனப்படும் சமூக வலைத்தளம் ஆகும். இன்னும் 5 முதல் 8 ஆண்டுகளுக்குள் இந்த facebook  அழிந்துவிடும் அல்லது புறக்கணிக்கப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் முடியவில்லை ஆனால் அதை உண்மை என்று நம்பவைக்க கூடிய அளவிற்கு பல கருத்துக்களையும், உதாரணங்களையும் முன்வைக்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுவது தொண்ணூறுகளின் இணையதள உலகில் கோலோச்சிய யாஹூ நிறுவனத்தைத்தான். அந்த காலகட்டத்தில் யாஹூ  சேவையை பயன்படுத்தாத இனையதள பயனரே இல்லை எனலாம் அந்த அளவிற்கு யாஹூ பிரபலம். நாளடைவில் யாஹூ தனது முக்கியத்துவத்தை இழந்தது. இதற்கு  முக்கிய காரணம்  கூகிள் வரவு அதை தொடர்ந்து கூகிளின் சமூக வலைத்தளமான ஓர்குட் இன் எழுச்சி.  தற்போது யாஹூ நிறுவனத்தின் நிகர லாபம், 2000  ஆண்டில் கிடைத்த வருமானத்தின் 10  இல் ஒரு பங்கு மட்டுமே.

அடுத்த தலைமுறை இணையதள சேவை கணினியை விட gadgets  எனப்படும் செல்போன் , டேபிலேட் போன்றவற்றின் மூலமே உபயோகிக்க படும். தற்போது  50 சதவிகிதம் பேர்கள் மட்டுமே  gadgets மூலம் facebook  கை பயன்படுத்துகிறார்கள் இந்த நிலைமை நீடித்தால் facebook  மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிடும் என அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிபுணர் எரிக் ஜாக்சன் கூறுகிறார்.

எது எப்படியோ ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புதிய சமூக வலைத்தளம் தோன்றி மறைவது வாடிக்கை என்றாகி விடும் போலிருக்கிறது.

புதன், 6 ஜூன், 2012

இன்று முதல் IVP4 to IVP6 ( Internet Protocol Version )

இன்று முதல் பெரும்பாலான இணையதள  சேவை அளிக்கும் நிறுவனங்கள்(google , Facebook)  IVP4 லிருந்து IVP6 க்கு மாறுகின்றன.  IVP4 என்பது இணைய  இணைப்பில் உள்ள கணினிகளுக்கு முகவரி(IP Address )  கொடுக்கும் Internet portocol  என்பதன் பதிப்பு(Version )  ஆகும். இது 32 bit  அளவுள்ளது, எனவே இதைபயன்படுத்தி சுமார் 232 அதாவத 4 294 967 296 கணினிகளுக்கு முகவரி அளிக்க முடியும். ஆனால் இன்று 
இணையத்தில் உள்ளகணினிகளின் எண்ணிக்கை இதை விட பன்மடங்கு பெருகிவிட்டதால் 
கணினிகளுக்கு முகவரி(IP Address) கொடுப்பதில் பல  சிக்கல்கள் எழுந்தது.இதை தவிர்க்கும் பொருட்டு உருவாக்கபட்டதுதான் IVP6 இது பல ஆண்டுகளக்கு முன்னரே வடிவமைக்கபட்டுவிட்டாலும் இதை பயன் பாட்டுக்கு கொண்டுவருவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தது.குறிப்பாக இணையதள சேவை அளிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த சேவைக்கு மாறுவதற்கு தயக்கம் காட்டின, ஏனென்றால் அவைகள் தங்கள் கணிப்பொறியில் பல மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. தற்போது பல பெரிய நிறுவனங்கள் தேவையான் மாற்றத்தை செய்து IVP6 கு மாறுவதற்கு தயாராகிவிட்டன.

இந்த IVP6 இன் சிறப்பு என்னவென்றால் இதன் மூலம் சுமார்  2128   கணினிகளுக்கு முகவரி கொடுக்க முடியும். இதில் உள்ள ஒரு சிறிய குறைபாடு என்ன வென்றால் IVP4  4 *3  அளவுள்ள எண்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முகவரி இப்போது 8 *4  அளவுள்ள எண்கள்  மூலம் வடிவமைக்கப்படும்  மேலும் இது hexadeciaml  எண்கள் ஆகும். இந்த எண்களை நினைவில் கொள்வது சற்று கடினம்.

செவ்வாய், 5 ஜூன், 2012

ஒற்றன்

பொன்னியின் செல்வன்   - ஆழ்வார்கடியான்  ஒரு புரியாத புதிர்

தலைப்பை பார்த்துவிட்டு இங்கே வந்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா ? அது இன்ப அதிர்ச்சியா ? இல்லை கடுப்பில் வந்த அதிர்ச்சியா ?  என்பதை இபோதைக்கு ஒத்தி வைத்துவிட்டு பதிவை படித்துவிட்டு அப்புறம் பின்னுட்டம் பகுதியில் உங்கள் கொலைவெறியை தீர்த்துக்கொள்ளவும்.பொன்னியின் செல்வன் நாவலை  படிக்காதவர்களை படிக்க வைக்கும்  ஒரு சிறிய முயற்ச்சி.
பொன்னியின் செல்வன் படித்து முடித்ததிலிருந்து அதைப்பற்றி ஏதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற தீ என்னுள் கனன்று கொண்டிருந்தது. அதற்கான நேரம் இப்போது தான் கிடைத்தது. சரி மொக்க போட்டது போது விசயத்துக்கு வான்னு நீங்க சொல்லறது தெரியுது... இனிமேலும் உங்கள கடிக்க மாட்டேன் தொடர்ந்து படிக்கவும்.

பொன்னியின் செல்வன் சரித்திர நாவலின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று தான் இந்த ஆழ்வார்கடியான். கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணிப்பவர்கள் இருவர், அவர்களில் ஒருவன் கதையின் நாயகனாக அறியப்படும்  வாணர்குல வீரன்  பொன்னியின் செல்வனின்(அருள்மொழி வர்மன்)   அண்ணன் ஆதித்த கரிகாலனின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன். கதையின் பிற்பகுதியில் இந்த வந்தியதேவன் அருள்மொழி வர்மனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவனுக்கும் உயிர் தோழனாகிறான்.  மற்றொருவன்  வைஷ்ணவத்தை வெறித்தனமாக பின்பற்றும் ஆழ்வார்கடியான்.கல்கி அவர்கள் அழ்வார்கடியானின் தோற்றத்தை மிகவும் அழகாக   இவ்வாறு விவரிக்கிறார் "கையில் ஒரு குறுந்தடியும், தலையின் பின்புறத்தில் ஒரு சிறிய குடுமியுடன்,  சற்று குள்ளமான உருவம்". இதன் பிறகு ஆழ்வார்கடியான் பாத்திரம் நாவலில் வரும்போதெல்லாம் அவர் உருவம் நம் கண்முன் வந்து செல்வதை தவிர்க்க முடியாது.

 இந்த இரு காதப்பதிரங்களும்(வந்தியதேவன் ,ஆழ்வார்கடியான்)  பல இடங்களில் ஒன்றையொன்று பரிகாசம் செய்வதும், ஒருவரை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பது போலவும் சொல்லப்பட்டிருக்கும்.  நாவலின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ஆழ்வார்கடியான் யார்? ஏன் கதை முழுவதும் வந்தியத்தேவன் மற்றும் பலரையும் பின்தொடர்ந்து பல ரகசியங்களை அறிந்து கொள்கிறார் என்று தெரியும். இந்த இரு கதாபத்திரங்களின் உதவியால் தான், எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து சோழர்களின் வரலாற்றிலே முக்கியமான அரசனும்  தெற்கு ஆசியாவில் வெற்றிக்கொடி நாட்டியவனும், காலத்தால் அழியாத தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனுமான இராஜராஜ சோழன் சோழ அரசை காப்பற்றினான்.

நாவலின் ஆரம்பத்தில் ஆழ்வார்கடியான்  வைஷ்ணவத்தை வெறித்தனமாக பின்பற்றுபவராகவும், சைவர்களுடன் தர்க்கம் புரிபவராகவும் சொல்லப்படிருக்கும், அதன் பிறகு இலங்கையில் வந்தியதேவன் உடன் சேர்ந்து பொன்னியின் செல்வரை சோழ தேச தலைநகருக்கு கொண்டுவர அவர் செய்யும் முயற்சிகளும் அதில் தோல்வியடைந்து  வந்தியதேவனையும் , பொன்னியின் செல்வரையும் விட்டுவிட்டு தமிழகம் வந்து மீண்டும் அவர்களை அடைந்து அருள்மொழி வர்மர் அவருடைய தந்தை சுந்தர சோழனை அடையும்  வரையும்  உடன் இருப்பார்.

அதன் பிறகு   நாட்டில்  நடைபெறும் பல  குழப்பங்களில் இருந்து அரசை காப்பற்ற அவர் எடுக்கும் பல முயற்ச்சிகள் அபாரமானவை. இறுதியில் சுந்தர  சோழரால் சந்தேகபடும் போதுதான் மற்றவர்களுக்கு இவர் ஒரு ஒற்றன் என்பது அநிருத்த பிரம்மராயர் மூலம் தெரியவரும்.இதற்கிடையில் ஆழ்வார்கடியான், கதையின் வில்லியாக அறியப்படும் நந்தினியின் அண்ணன் என்று அறிய வரும் போது அவர் மீது ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க இயலாது. நந்தினியை சோழ தேசத்தை கைப்பற்றும் முயற்ச்சியில் இருந்து விடுவிக்க எவ்வளவோ முயற்ச்சி செய்தும் தோல்வியடைவது பரிதாபத்திற்குரியது.

மொத்தத்தில் ஆழ்வார்கடியான் கதாப்பாத்திரம் இந்த நாவலி படிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை.மேலும் சில கதாபாத்திரங்களை பற்றி வரும் பதில் பார்ப்போம்.

திங்கள், 4 ஜூன், 2012

இரயில் பயணங்களில் - பெங்களூர் to காட்பாடி

நான் பெங்களூரில் இருந்து காட்பாடி செல்வதற்கு பெரும்பாலும் கிருஷ்ணராஜபுரத்திலிருந்து  காலை லால்பாக் விரைவு  இரயிலில் ஏறுவது வழக்கம்.
எப்போதுமே நான் முன்பதிவு செய்துள்ள இருக்கையில் யாரவது உட்கார்ந்து இருப்பார்கள். அவங்களை எந்திருக்க வச்சிட்டு நாம உடகாரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.கொஞ்சம் கூட எந்திருக்க மனசே இல்லாம இது உங்க சீட்டா? அப்படின்னு கேட்டுகிட்டே எவ்வளவு மெதுவா எழுந்திருக்க முடியுமோ அவ்வளோ மெதுவா எழுந்திருப்பானுங்க. இன்னும் சிலபேர் அவனுங்களும் முன்பதிவு செஞ்சிருப்பானுங்க அப்படியிருந்தும் நம்ம சீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு அவங்க சீட்டுல போய் உட்கார சொல்லுவாங்க, அங்க போய் பார்த்தா அது ரென்னு பேருக்கு நடுவுல இருக்கும், அந்த ரெண்டு பேரோட சைச பார்த்த உடனே நமக்கு பீதி கெலம்பீடும். போனாப்போவுதுன்னு   உட்கார்ந்து விட்டோம் அவ்ளோதான் இறங்கரதுக்குள்ள நம்ம ரெண்டு தோள் படையும் நசுங்கி போயிருக்கும்.
ஒருவேளை ஓர சீட்டா இருந்ததுன்னா போற வரவனுங்க இடிச்சியே கொன்னுடுவானுங்க. எப்பவுமே ஜன்னலோர சீட்டைத்தான் முன்பதிவு செஞ்சிட்டே போவேன் ஆனா ஒரு நாள் கூட அந்த சீட்டல உட்கார முடியாது. சார் பேமலியோட வந்திருக்கோம் , சார் வயசானவங்க இருக்காங்க அப்படி இப்படி ன்னு  ஏதாவது ஒரு காரணத்தால வேற சீட்டுல பொய் உட்கார வேண்டி இருக்கும். அப்பாட ன்னு எதோ ஒரு இடத்துல உட்கார்ந்த பிறகு அடுத்த தொல்லைகள் ஆரம்பிக்கும். பக்கத்தில உட்கார்ந்துகிட்டு எப்படித்தான் கண்டுபிடிபாங்க்களோ தெரியாது , சார் காட்பாடி இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு, இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு அப்படின்னு நொய் நொய் ன்னு கேட்டுகிட்டே வருவானுங்க. இந்த தொல்லை தாங்காம தான் பட்டு கேட்கிறோமோ  இல்லையோ காதுல mp3 player மாடிக்க வேண்டியது, அப்படியும் விடமாட்டனுங்க, தட்டி கேட்க வேண்டியது கேட்பானுங்க.
ஆனா இவ்வளவு தொல்லையில் ஒரே ஒரு நல்லது என்னன்னா, மூனே கால் மணி நேரம் போவதே தெரியாது.

அடுத்த பதிவில் சந்திப்போம் ................

எச்சரிக்கை  : இந்த பதிவிற்கான வரவேற்பை பொறுத்து மேலும் இதை சார்ந்த பதிவுகள் எழுதப்படும்.