வெள்ளி, 18 டிசம்பர், 2009

பேசும் கண்கள்

என்னே விந்தை!

கண்கள் மட்டும் பேச
வாய் வேடிக்கை பார்க்கிறதே?

இந்த காதலில்!

சிறுவன்

வியாழன், 17 டிசம்பர், 2009

மலர்கள் அழுகின்றன!!!!

மலர்களுக்கும் அழத்தெரியும் என்று
இன்று தெரிந்து கொண்டேன்
அவைகள் உன் கூந்தலை பிரியும் போது
சிறுவன்

புதன், 16 டிசம்பர், 2009

எப்போதும் நான் குழந்தை

எத்துனை உறவுகள் என்னை
அண்ணன் தம்பி மாமா கணவன்
அப்பா எனப் பார்க்க....

ஆனால் என்னை எப்போதும்
குழந்தையாய் பார்க்க அம்மா!!
உன்னைத் தவிர யார் இருக்கா?

சிறுவன்

திங்கள், 14 டிசம்பர், 2009

விடி(வு)யல் எப்போது?

மூட்டை முடிச்சுகளாய் தலையில்
எங்கள் குழந்தைகள்!

சோகங்களே மூட்டை மூட்டையாய்
எங்கள் நெஞ்சினில்!

எதிரியின் குண்டுகளை சுமக்கும்
எங்கள் கருவறைகள்!

மரணம் மடடுமே தினம் தினம்
எங்கள் அருகில்!

விடியலுக்காக காத்திருக்கவில்லை நாங்கள்
விடியும் வரையிலாவது உயிரோடிருப்போமா?
என்றுதான் காத்திருக்கிறோம்!
சிறுவன்