செவ்வாய், 22 டிசம்பர், 2009

அவளைத் தொட்ட தென்றல்

என் மனதை வருடி
காதல் உணர்வைத் தூண்டும்
தென்றல் காற்றே !!

அவள் மனத்தினுள் என்னைக்
கூட்டிச் செல்வாயா?
ஏன் என்றால் ?

அவளின் இருப்பிடம் தெரிந்த
எனக்கு தெரியவில்லை அவள்
மனதை அடையும் வழி !

திங்கள், 21 டிசம்பர், 2009

தேன்தேடும் வண்டு!!!

மலருக்குள் புகுந்து தேனைத்
தேடும் வண்டே! அவள்
மனதிற்குள் புகுந்து கொஞ்சம்
தேடிப்பார்த்துச் சொல்

என் இதயம் அங்கே
இருக்கிறதா என்று?

ஏனென்றால் சில நாட்களாய்
என் இதயத்தை காணவில்லை

அவள் ஓரவிழிப் பார்வை
என்னை உருட்டி இழுத்ததாய்
ஞாபகம்!!!

சிறுவன்