வியாழன், 7 ஜூன், 2012

இன்னும் 5 ஆண்டுகளில் facebook மறையப்போகிறதா?

இன்று இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் தெரிந்த மற்றும் பயன்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருப்பது facebook  எனப்படும் சமூக வலைத்தளம் ஆகும். இன்னும் 5 முதல் 8 ஆண்டுகளுக்குள் இந்த facebook  அழிந்துவிடும் அல்லது புறக்கணிக்கப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் முடியவில்லை ஆனால் அதை உண்மை என்று நம்பவைக்க கூடிய அளவிற்கு பல கருத்துக்களையும், உதாரணங்களையும் முன்வைக்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுவது தொண்ணூறுகளின் இணையதள உலகில் கோலோச்சிய யாஹூ நிறுவனத்தைத்தான். அந்த காலகட்டத்தில் யாஹூ  சேவையை பயன்படுத்தாத இனையதள பயனரே இல்லை எனலாம் அந்த அளவிற்கு யாஹூ பிரபலம். நாளடைவில் யாஹூ தனது முக்கியத்துவத்தை இழந்தது. இதற்கு  முக்கிய காரணம்  கூகிள் வரவு அதை தொடர்ந்து கூகிளின் சமூக வலைத்தளமான ஓர்குட் இன் எழுச்சி.  தற்போது யாஹூ நிறுவனத்தின் நிகர லாபம், 2000  ஆண்டில் கிடைத்த வருமானத்தின் 10  இல் ஒரு பங்கு மட்டுமே.

அடுத்த தலைமுறை இணையதள சேவை கணினியை விட gadgets  எனப்படும் செல்போன் , டேபிலேட் போன்றவற்றின் மூலமே உபயோகிக்க படும். தற்போது  50 சதவிகிதம் பேர்கள் மட்டுமே  gadgets மூலம் facebook  கை பயன்படுத்துகிறார்கள் இந்த நிலைமை நீடித்தால் facebook  மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிடும் என அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிபுணர் எரிக் ஜாக்சன் கூறுகிறார்.

எது எப்படியோ ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புதிய சமூக வலைத்தளம் தோன்றி மறைவது வாடிக்கை என்றாகி விடும் போலிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக