வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அருள்மொழி வர்மன் (எ) இராஜ இராஜ சோழன்சுந்தர சோழனின் கடைசி வாரிசான அருள்மொழி வர்மன் பிற்காலத்தில்  இராஜ இராஜ சோழன் என்ற பெயருடன் சோழநாட்டை ஆட்சி செய்தவன். சோழர்களின் வரலாற்றில் ஏன் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு புகழுடன் ஆட்சி செய்தவன் அருள்மொழிவர்மன். அருள்மொழி வர்மன் சிறுவயதில் இருந்தே  அக்கா குந்தவியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார், குந்தவையும் தம்பி மீது அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.தன் தம்பி நிச்சயம் ஒருநாள் பல தேசங்களுக்கு அரசனாவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
சிறுவயதில் பொன்னி நதி வெள்ளத்தில் அகப்பட்டு இறக்கவிருந்த அருள்மொழி வர்மனை அந்த பொன்னி தேவியே பெண் உருவில் வந்து காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் என்றும் அழைக்கபடுகிறார்.தன்னுடைய இளம் வயதிலேயே பெரும் படைக்கு தலைமை தாங்கி இலங்கையில் சிங்களர்களின் கொட்டத்தை அடக்கவும் பாண்டிய முடியை கொண்டு வரவும் செல்கிறார்.ஆனால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அறிந்து படையை விட்டுவிட்டு சோழநாடு திரும்புகிறார், திரும்பும் வழியிலே பல ஆபத்துகளில் இருந்து தப்பி சோழநாடு வந்து சேர்கிறார்.மக்களின் ஆதரவு அருள்மொழி வர்மனுக்கு இருந்தும் மிக பெருந்தன்மையுடன் அதை விட்டுகொடுத்து தன் சித்தப்பாவை அரசனாக்குகிறார்.

தன்னுடைய அண்ணன் ஆத்தித கரிகாலன் நயவஞ்சகமாக கொல்லப்பட்டவுடன் நாட்டில் ஏற்படும் குழப்பத்தை மிகவும் புத்திசாலிதனமாக கையாண்டு சரிசெய்கிறார். மேலும் ஆட்சி கட்டிலில் யார் அமருவது என்ற குழப்பத்தையும் தெளிவாக கையாண்டு தனது சித்தப்பாவை சோழ அரசனாக்கி சரி செகிறார். அதன் பிறகு சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து அவர் சித்தப்பா இறந்தவுடன் ஆட்சி கட்டிலில் அமருகிறார். அது நாள் வரையிலும் பெரும் படை  திரட்டி கடற்கொள்ளையர்களையும் எதிரிகளையும் அடக்குகிறார். அருள்மொழி வர்மன் தன்னை காதலிக்கும் வானதியை திருமணம் செய்து கொள்கிறார். தான் காதலிக்கும் பூங்குழலியை தன சித்தப்பா சேந்தன் அமுதன் காதலிப்பதை அறிந்து விட்டுகொடுக்கிறார்.  அருள்மொழி வர்மன் அரசனாக பதவி ஏற்கும் போது அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பதாகும்.மேலும் அருள்மொழி அரசனாக பதவி ஏற்கும் முன் அவரது மனைவி தன் சபதப்படி இறந்து விடுகிறார். குடவோலை முறை என்னும் முறையை அறிமுகப்படுத்தி மக்களை ஆளும் அதிகாரிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவந்தது , தஞ்சையில் இன்றுவரையிலும் அழியாப் புகழுடன் விளங்கும் பெரிய கோவிலை ஈழுப்பியது மற்றும்   கடல் கடந்து பல தேசங்களை வென்று புலிக்கொடியை பறக்க விட்டது போன்ற  சாதனைகளை செய்த மாபெரும் வீரன்  தமிழனான   இராஜ இராஜ சோழன் என்பதில் நிச்சயம் நமக்கு பெருமையே .