திங்கள், 4 ஜூன், 2012

இரயில் பயணங்களில் - பெங்களூர் to காட்பாடி

நான் பெங்களூரில் இருந்து காட்பாடி செல்வதற்கு பெரும்பாலும் கிருஷ்ணராஜபுரத்திலிருந்து  காலை லால்பாக் விரைவு  இரயிலில் ஏறுவது வழக்கம்.
எப்போதுமே நான் முன்பதிவு செய்துள்ள இருக்கையில் யாரவது உட்கார்ந்து இருப்பார்கள். அவங்களை எந்திருக்க வச்சிட்டு நாம உடகாரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.கொஞ்சம் கூட எந்திருக்க மனசே இல்லாம இது உங்க சீட்டா? அப்படின்னு கேட்டுகிட்டே எவ்வளவு மெதுவா எழுந்திருக்க முடியுமோ அவ்வளோ மெதுவா எழுந்திருப்பானுங்க. இன்னும் சிலபேர் அவனுங்களும் முன்பதிவு செஞ்சிருப்பானுங்க அப்படியிருந்தும் நம்ம சீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு அவங்க சீட்டுல போய் உட்கார சொல்லுவாங்க, அங்க போய் பார்த்தா அது ரென்னு பேருக்கு நடுவுல இருக்கும், அந்த ரெண்டு பேரோட சைச பார்த்த உடனே நமக்கு பீதி கெலம்பீடும். போனாப்போவுதுன்னு   உட்கார்ந்து விட்டோம் அவ்ளோதான் இறங்கரதுக்குள்ள நம்ம ரெண்டு தோள் படையும் நசுங்கி போயிருக்கும்.
ஒருவேளை ஓர சீட்டா இருந்ததுன்னா போற வரவனுங்க இடிச்சியே கொன்னுடுவானுங்க. எப்பவுமே ஜன்னலோர சீட்டைத்தான் முன்பதிவு செஞ்சிட்டே போவேன் ஆனா ஒரு நாள் கூட அந்த சீட்டல உட்கார முடியாது. சார் பேமலியோட வந்திருக்கோம் , சார் வயசானவங்க இருக்காங்க அப்படி இப்படி ன்னு  ஏதாவது ஒரு காரணத்தால வேற சீட்டுல பொய் உட்கார வேண்டி இருக்கும். அப்பாட ன்னு எதோ ஒரு இடத்துல உட்கார்ந்த பிறகு அடுத்த தொல்லைகள் ஆரம்பிக்கும். பக்கத்தில உட்கார்ந்துகிட்டு எப்படித்தான் கண்டுபிடிபாங்க்களோ தெரியாது , சார் காட்பாடி இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு, இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு அப்படின்னு நொய் நொய் ன்னு கேட்டுகிட்டே வருவானுங்க. இந்த தொல்லை தாங்காம தான் பட்டு கேட்கிறோமோ  இல்லையோ காதுல mp3 player மாடிக்க வேண்டியது, அப்படியும் விடமாட்டனுங்க, தட்டி கேட்க வேண்டியது கேட்பானுங்க.
ஆனா இவ்வளவு தொல்லையில் ஒரே ஒரு நல்லது என்னன்னா, மூனே கால் மணி நேரம் போவதே தெரியாது.

அடுத்த பதிவில் சந்திப்போம் ................

எச்சரிக்கை  : இந்த பதிவிற்கான வரவேற்பை பொறுத்து மேலும் இதை சார்ந்த பதிவுகள் எழுதப்படும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக