வியாழன், 14 ஜூன், 2012

யார் உங்களில் அடுத்த ஜனாதிபதி?

          அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுபதற்கான போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.  தேர்தலுக்கான தேதி வேறு அறிவிக்கப்பட்டுவிட்டது. கிட்டதட்ட அனைத்து பெரிய கட்சிகளும் ஒவ்வொரு வேட்பாளர் பெயரினை அறிவிக்க கதிகலங்கி போயுள்ளது காங்கிரஸ் கூடாரம்.மத்தியில் ஆட்சியில் இருந்தும் தங்களால் வழிமொழிந்த ஒருவரை ஜனாதிபதியாக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அது உள்ளது.இதன் காரணமா பெரும்பான்மை பலம் இல்லாததால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு தொல்லை கொடுக்கும் அதன் கூட்டணி கட்சியான திர்னாமுள் காங்கிரஸ் கட்சி தலைவி இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சீண்ட ஆரம்பித்துள்ளார். சோனியா காந்தியோ அவரின் தீவிர  விசுவாசிகளில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப்பை ஜனாதிபதியாக்கி விடலாம் என்று கனவு காண அதை உடைக்கும் வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளார் மம்தா. அப்படி என்ன தீராத பகையோ திரு.பிரணாப் மீது?.

         மமதா அவர்கள் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்குடன் சேர்ந்து மூன்று பேர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளது. அவர்கள் முறையே திரு.மன்மோகன் சிங் , அப்துல் கலாம் மற்றும் சோம்நாத் சட்டர்ஜி. இதில் அப்துல் கலாம் பெயரை ஒருபோதும் காங்கிரஸ் தலைவி ஏற்றுகொள்ள மாட்டார், அடுத்தது திரு.மன்மோகன் சிங் அவர் பெயரும் நிராகரிக்கப்பட்டது  ஏனென்றால் அது அடுத்த பதவி பிரச்சினையை ஏற்படுத்த கூடும்.மேலும் இருப்பது சோம்நாத் சட்டர்ஜி அவரையும் திரு.சோனியா அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

       நிலைமை இப்படி இருக்க ஊருக்கு முன்பே நவீன் பட நாயக்குடன் சேர்ந்து சங்கமா பெயரை அறிவித்துவிட்டார் அதிரடி ஜெயலலிதா. சங்கமாவும் தன பழங்குடியின பின்புலத்தை வைத்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் ஆதரை கோரிவருகிறார். பாஜகவோ உள்கட்சி பூசலை தீர்க்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருப்பதால் இந்த விசயத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. காங்கிரசின் வியுகம் வெற்றி பெறுமா, ஜெயலலிதாவின் கூட்டணி கரை தேறுமா, பாஜாக தான் கரை சேருமா இல்லை மமதா முலாயம் சிங் கூட்டணி கனவு பலிக்குமா. என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.

புதன், 13 ஜூன், 2012

கொடுமணல் - தமிழனின் வரலாற்று புதையல் (பாகம் 1 )




புதுச்சேரி பல்கலை கழகத்தின் வரலாற்று பேராசிரியர்  திரு.ராஜன் , 6  பிஎச்டி மாணவர்கள் , நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பல உள்ளூர் மக்களின் உதவியுடன் கடந்த இரண்டு மாத காலமாக ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ள கொடுமணல் என்னும் கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்கு கண்டுபிடித்த பல பொருட்கள் தமிழனின் வரலாற்று பெருமைக்கு மேலும் பெருமைசேர்க்கும் ஒரு மணிமகுடமாக இருக்கும். இவை அனைத்து சுமார் 2500  ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  அதிலும் அவர்கள் கண்டறிந்தது நூற்றில் ஓரு பங்குதான் என்று திரு.ராஜன் அவர்களே கூறுகிறார் மேலும் அந்த படுக்கையை மொத்தமாக அகழ்வு செய்ய குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு  மேலாகும் என்று கூறுகிறார்.


                                                       Courtesy : The Hindu
கொடுமணலில் காணப்படும் தொழிற்சாலை போன்று இந்து வரை இந்தியாவில் எந்த அகழ்வாரய்ச்சியிலும் கண்டறியப்படவில்லை என்ற செய்தி தமிழன் தான் உலகிற்கே முன்னோடியாக பல துறைகளில் சிறந்து விளங்கினான் என்பது தெளிவாகிறது.இந்த தொழிற்ச்சாலையில் இரும்பு , துணி வகைகள் மற்றும் சங்கு வளையல்கள் போன்றவைகளை உற்பத்தி செய்துள்ளனர்.


தொழிற்சாலை
இரும்புதாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுக்கும் ஒரு தொழிற்சாலை போன்றதொரு அமைப்பை திரு.ராஜன் அவர்களின் குழு  கொடுமணலில்  கண்டுபிடித்துள்ளது.  இதை உறுதிபடுத்தும் விதமாக இதற்கு முன்னர் சென்னிமலை அருகே இருபுத்தாது படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.சென்னிமலையில் எடுக்கப்பட்ட இரும்புத்தாதுக்களை கொடுமணலில் பிரித்தெடுத்து அதை  பல தேசங்களுக்கும் ஏற்றுமதி செய்துள்ளனர்.மேலும் குதுப்மினாரில் உள்ள துருப்பிடிக்காத பழங்கால தூண் இங்கு தயாரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது. இதை உறுதி செய்யும் விதமாக இங்கு பல வட இந்திய எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.இதிலிருந்து இந்த இடம் தொழிற்சாலையாக மட்டும் இல்லாமல் அந்த பொருட்களை வெளி இடங்களுக்கு வர்த்தகம் செய்யும் இடமாகவும் இருந்திருக்கிறது.

இதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட  பழங்கால  உடைந்த பானையின்  ஓடுகள் கிடைத்துள்ளது. அதில் "சம்பன் சுமணன்" என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன். இதிலிருந்து இந்த தொழிற்ச்சாலையின் உரிமையாளராக அவர்கள் இருக்ககூடும் என்று தெரிகிறது. இந்த பிராமி எழுத்துக்களானது சங்க கால இடங்களான பூம்புகார் , கொற்கை போன்ற இண்டங்களில் கிடைக்கப்பெற்ற எழுத்துக்களை விட அதிகம் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறும் தகவல்கள் வியக்கும் வண்ணம் உள்ளது. இங்கிருந்து ரோம் போன்ற நாடுகளுக்கு இரும்பை ஏறுமதி செய்துள்ளனர் என்கிறார்கள் அவர்கள்,

( தொடரும்)

திங்கள், 11 ஜூன், 2012

பொன்னியின் செல்வன் - கதாபாத்திரங்கள் அவற்றின் உறவு முறைகள்

பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படித்துக் கொண்டிருப்பவர்களுக்ககவும், படிக்க இருப்பவர்களுக்கும் உதவிகரமாக  அதில் வரும் கதாபாத்திரங்கள் மாறும் அவற்றின் உறவு முறைகள் பற்றியது இந்த பதிவு.

வல்லவரையன் வந்திய தேவன்  -  வாணர்குல வீரன்  ஆதித்த கரிகாலனின் நண்பன், குந்தவையின் காதலன்  மற்றும் கதையின் நாயகன்

 பராந்தக சோழன்  பிள்ளைகள்   அரிஞ்சய சோழன்   மற்றும்  கண்டராதித்தர்.   அரிஞ்சய சோழன்   புதல்வன் சுந்தர சோழன் இவருக்கு மூன்று பிள்ளைகள் குந்தவை , ஆதித்த கரிகாலன் , அருள்மொழி வர்மன். இந்த அருள்மொழி வர்மன் தான் பிற்காலத்தில் இராஜ இராஜ சோழன் எனும் பெயரால் அழைக்கப்பட்டான் .


  1.  அரிஞ்சய சோழன்     
    1. சுந்தர சோழன்  - மலையமான் மகள்  
      1. குந்தவை - கதையின் நாயகி 
      2. ஆதித்த கரிகாலன்               
      3. அருள்மொழி வர்மன்-இராஜ இராஜ சோழன்
  2.  கண்டராதித்தர்  - செம்பியன் மாதேவி
    1. மதுராந்தகன் - சிறிய பழுவேட்டரையர் மகள்



வானதி - அருள்மொழி வர்மனின் மனைவி
சேந்தன் - பூங்குழலி
பெரிய பழுவேட்டரையர் - நந்தினி -  கோட்டை நிர்வாகம் மற்றும் கருவூல நிர்வாகம்
சிறிய பழுவேட்டரையர்  (கலாந்தண்டகர் )  - கோட்டை நிர்வாகம் மற்றும் கருவூல நிர்வாகம்
அநிருத்தர் - முதன் மந்திரி
ஆழ்வார்கடியான் - அநிருந்தரின் முதன்மை ஒற்றன்
கந்தமாறன் - சம்புவரையர் குல இளவரசன்  மற்றும் ஆதித்த கரிகாலனின் நண்பன்
மணிமேகலை - கந்தமாறன் தங்கை
பார்த்திபேந்திர பல்லவன் - ஆதித்த கரிகாலனின் நண்பன்
விக்ரம பூபதி - சேனாதிபதி
ரவிதாசன்  - பாண்டிய மன்னனின்  ஆபத்துதவி
காளமுகன் - பாண்டிய மன்னனின் ஆபத்துதவி
பினாபகாணி - வைத்தியர் மகன்
தியாகவிடங்கர்  - பூங்குழலியின் தந்தை