வெள்ளி, 1 ஜூன், 2012

yum -(Redhat ,Federo ,CentOS ) தானியங்கி மென்பொருள் நிறுவி

லினக்ஸ் இயங்கு செயலி பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புதிய மென்பொருள்களை நிறுவதுதான். அதுவும் (installation from source )  எனப்படுகின்ற முறையில் மென்பொருள் நிறுவ முற்படும் போது, பல்வேறு துணை மென்பொருள்களை
நிறுவச்சொல்லி  கடுப்பேற்றும்.  ஒவொரு துணை மென்பொருளையும் தேடி கண்டுபிடித்து நிறுவுவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்லாமல்
அதிக நேரமும் செலவிட வேண்டிவரும்.

லினக்சில்  மென்பொருள் மூன்று முறையில் நிறுவப்படுகின்றது.
1 . installation from source  
  மிகவும் கடினமான முறை , இதில் பயனரே compile  மற்றும்  install எனப்படுகின்ற நிறுவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
2 . RPM  Installation 
  மேற்சொன்ன முறையை விட சற்று எளிதான முறை, ஆனால் துணை மென்பொருள்களை நீங்களே தான் கண்டுபிடித்து நிறுவவேண்டும்.
3 . yum  Installation 
    மிகவும் எளிதான முறை இதில் பயனர் எந்த வேலையும் செய்ய தேவையில்லை,
    இந்த yum  மென்பொருள் மற்றும் துணை மென்பொருள் ஆகியவற்றை தானே கண்டுபிடித்து நிறுவிடும்.

இந்த yum  வசதியானது Redhat ,Federo ,CentOS ,RHEL போன்ற Redhat  வகை  இயங்கு செயலியில் மட்டுமே காணப்படும்.
debiean  வகை இயங்கு செயலியில் Yum  பதில்  apt -get எனப்படுகின்ற வசதி காணப்படும். yum  வசதி மூலம் நீங்கள் மென்பொருள் நிறுவும் போது,
உங்கள் கணினியில் ஏற்கனவே அந்த மென்பொருள் இருந்தால் அந்த மென்பொருளின் புதிய பதிப்பை தேடி நிறுவும்.
இவ்வாறு புதிய பதிப்பை நிறுவும் போது தேவைப்பட்டால் உங்கள் கணினியில் உள்ள பழைய பதிப்பை அழித்துவிடும்.

முன்னேற்பாடுகள்:
yum  வசதி தடையின்றி இயங்குவதற்கு உங்கள் கணிபொறி இணையதள இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் கணினி proxy  முறையில் இணையதள இணைப்பு பெற்றிருந்தாலும் இது தடையின்றி இயங்கும்.

Yum  மூலம்   மென்பொருளை நிறுவ :
# Yum install software name

ஒருவேளை உங்களுக்கு  Yum க்கான  software name  தெரியவில்லை என்றால்
#Yum search software name
இது நீங்கள் கொடுத்த software name  க்கு இணையான Yum  software name -களை  கொடுக்கும், இதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 
தேவையான மென்பொருளை நிறுவலாம்.


(தொடரும்)

வியாழன், 31 மே, 2012

பெங்களூர் - கடலூர் - நாகூர் பயணிகள் ரயில் சேவை ஜூலை 1 தேதி முதல் தொடக்கம்

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட, பொதுமக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் மற்றும் நாகூர் இடையிலான ரயில் சேவை வருகின்ற ஜூலை 1 தேதி முதல்  இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிகாலையில் நாகூரில் இருந்து புறப்படும் பயணிகள் இரயில் கடலூர் துறைமுகம் , வடலூர் , விருத்தாசலம், ஆத்தூர் , சின்ன சேலம் , சேலம் , ஓசூர்  வழியாக பெங்களூரை மாலை சுமார் 6 .30  மணியளவில் சென்றடையும்.
 மறுமார்கத்தில்  பெங்களூரில் இருந்து காலை 7 .30  மணிக்கு புறப்படும் இரயிலானது ஓசூர் , சேலம், சின்ன சேலம், ஆத்தூர், விருத்தாசலம், வடலூர், கடலூர் துறைமுகம் வழியாக நாகூரை மாலை சென்றடையும்.
இது நிச்சயமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு இனிய செய்தியாக இருக்கும்.
இரயில் சேவையில்   பல ஆண்டுகளாக  மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்றால் அது கடலூர் மாவட்டமாக தான் இருக்கும். அதுவும் கடலூரிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால் அந்த கொடுமையை சொல்லி மாளாது  அதை அனுபவித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும், அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் என்றால் பெங்களூர் செல்லும் பயணிகள் பாடு திண்டாட்டம் தான். இந்த அறிவிப்பின் மூலம் பல ஆயிரம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.