வெள்ளி, 21 நவம்பர், 2008

பாத்திரம் அறிந்து பிச்சை போடனும்....

நான்கு கல்லூரி நண்பர்கள் இரவு உணவை முடித்துவிட்டு காலார நடக்க சென்றார்கள்.அப்படியே செல்லும் வழியில் வாழைப்பழம் சாப்பிடலான்டா!... என ஒருவன் சொல்ல அணைவரும் அருகில் இருந்த பெட்டிக்கடையை சென்றடைந்தார்கள். கடையில் கூட்டம் என்பதால் சற்று தள்ளி நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பிச்சைகாரர் ஒருத்தர் கடையில் தொங்கிக்கொண்டிருந்த வாழைத்தாரில் இருந்து கடைகாரருக்குத் தெரியாமல் வாழைப்பழம் ஒன்றை பிட்டுக்கொண்டு இருந்தார்.அதை அந்த நான்கு நண்பர்களில் ஒருவன் பார்த்து விட்டான். ஆனால் அந்த பிச்சைகாரர் பசிக்ககிறது என கையால் சைகைகாட்ட பேசாமல் விட்டு விட்டான்.

பிச்சைகாரன் வாழைப்பழத்துடன் செல்ல முயலுவதை கவணித்த கடைகாரன். அடிக்க கையை ஓங்க அவன் "அவதான் எடுத்துக்க சொன்னாரு" என்று அந்த நான்கு நண்பர்களில் ஒருவனை சொல்ல ... கடைக்காரன் ஆரம்பித்தான் "ஏன்டா? நீங்க எல்லாம் படிக்கிற பசங்கதான............. " என்று.

அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது தலைப்பு.