வெள்ளி, 30 நவம்பர், 2012

முந்திரி பலா அப்புறம் பண்ருட்டி

நான் சிறுவயதாக இருக்கும் போது  அதாவது இன்றில் இருந்து சுமார் 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில்  முந்திரி நிலபரப்பு மிகவும் குறைவு , ஊரை விட்டு வெளிப்புறமாக இருக்கும் நிலங்களிலும் , பொட்டல் மண் நிலங்களில் மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்த முந்திரி இப்போது அனைத்து நிலங்களிலும் முந்திரி என்ற நிலைக்கு வந்து விட்டது. இதற்கு காரணம் பருவ மழை பொய்த்து, முதலில் இரண்டு போகம் அறுவடை செய்த  நிலை ஒரு போகமாக மாறி பின்பு அதுவும் இல்லாமல் வெறும் முந்திரியை மட்டுமே நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.முதல்  போகமாக மணிலா அல்லது கம்பு , இரண்டாம் போகமாக உளுந்து அல்லது கேழ்வரகு பயிரிடுவது வழக்கம்.

உணவுத் தேவையில் பெரும்பகுதியை கம்பு, உளுந்து  மற்றும் கேழ்வரகு கொண்டே நிறைவு செய்வோம். பெரும்பாலும் ஒரு வேளை  மட்டுமே சோறு மற்ற இரு வேலைகள் கம்பு அல்லது கேழ்வரகு உணவுகள்தான்.இந்த நிலை இப்போது முற்றிலும் மாறி மூன்று வேளையும்  அரிசி உணவுகளே. கேழ்வரகு மற்றும் கம்பு இருந்த இடமே இப்போது இல்லை, எந்த வீட்டிலும் அதை சமைப்பது இல்லை.

நன்மை 
முந்திரியில் இருக்கும் ஒரே நன்மை என்னவென்றால் நாம் அதை  பராமரிக்க தேவையே இல்லை, மழை பெய்யும் போது  உரமிடல் மற்றும் பூ பூக்கும் நேரத்தில் பூச்சி மருந்து தெளித்தல் வேண்டும். இவை இரண்டும் வருடத்திகு ஒரு முறை மட்டுமே.வருமானம் 
 ஒரு ஏக்கர் இருந்தால் சுமார் 20000 வரை ஒருவருடத்தில் கிடைக்கும் அதுவும் அனைத்து செலவுகளும் போக சுமார் 15000 மட்டுமே மிஞ்சும், இந்த காலத்தில் இந்த தொகை ரொம்ப சொற்பம்.இதனாலேய முந்திரி மாறும் அதனை சார்ந்த தொழில்களை வருடம் முழுவதும் நடக்கும். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும், எங்கள் ஊரிலேய வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பை ஏறுமதி செய்யும் உள்ளூர்  முதலாளிகள்  உள்ளனர்.மேலும் அறுவடை காலத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய ஆட்களும் வருவது உண்டு. 

வருமானம் 
எண்கள்   ஊரின் மற்றொரு சிறப்பு பலா, பெரும்பாலும் முந்திரியின் நடுவே ஊடுபயிராக பயிர் செய்யப்படுவதுதான் பலா,  முந்திரிகாவது மருந்து அடிக்க வேண்டும் மாறும் உரமிட வேண்டும், பலா மரத்திற்கு எதுவும் தேவை இல்லை. இது வருடத்திகு ஒருமுறை பலன் தரக்கூடியது. முந்திரி பலன் தரும் அதே கால கட்டத்தில் தான், பலாவும் பலன் தரும்.பலா குறைந்த அளவே பயிரிடபட்டிருக்கும்.