புதன், 20 மார்ச், 2013

நினைவுகள்!!! மிதிவண்டியில் ஒரு லிப்ட் !
இந்த உலகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்சமாக இருக்கும் ரொம்ப நல்லவங்களாலதான், அப்பிடி ஒரு நல்லவர  என் கல்லூரி நாட்களில் சந்திச்சது என் பாக்கியம். ஆமாங்க   கல்லூரியில படிக்கையில , கல்லூரி முடிஞ்சி  வீட்டுக்கு போவும்போது பஸ்சுக்கு  டிக்கெட் எடுக்கிற  காசுல கரும்பு சூஸ் குடிச்சிட்டு  வர வண்டியில் லலிப்ட் கேட்டு வீட்டுக்கு போவோம்.இதுதான் எங்களின்  தினசரி வழக்கம் அப்படி போகும் போது  பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிபட்ட  ஒரு அதிசமான மனிதரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

ஒருநாளு  லிப்ட்  கேட்டு ரொம்ப நேரம் நிக்கிறேன் ஒரு வண்டிக்காரனும் நிக்கல. பயங்கர கடுப்புல வேகாத வெயில நின்னுகிட்டிருக்கும்போது  ஒரு சைக்கிள்காரன் வந்து லிப்ட் வேணுமான்னு கேட்டான், இப்படி வந்து நம்மள வெறுப்பேத்துரானே   நெனைச்சி  இல்ல வேணாம் ன்னு சொன்னேன். அதுக்கு அவன் ஒரு கேள்வி  கேட்டான் பாருங்க அப்படியே ஷாக்காயிட்டேன் , ஏன் வண்டியில் மட்டும் தான் லிப்ட் கேட்பிங்களா ?  சைகிள்ல லிப்ட் கேட்டா தரமாட்டோமா? வங்க பாஸ் அப்படின்னு கேட்டாரு.  இதுக்கு மேல வரலன்னு சொன்ன அடிக்க வந்துருவாரோன்னு நெனைச்சி  சைக்கிள்ல ஏறிட்டேன்.
சும்மா சொல்லகூடாது 4 கிலோ மீட்டருகிட்ட என்ன வச்சி சைக்கிள் மிதிச்சி என்னை கொண்டுபோய் சேர்த்தாரு. எத்தனையோ முறை லிப்ட் கேட்டு போனாலும் அந்த ஒரு சம்பவம் மட்டும் இன்னும் என் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கும். ஒவ்வொரு முறை அதைப் பற்றி நினைக்கும் அப்பா இப்படி ஒரு நல்லவரா அப்படின்னு தோணும். அவரு இப்ப எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.