புதன், 7 நவம்பர், 2012

நெய்வேலியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்


கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விழுப்புரம் , வேலூர் , பாண்டிச்சேரி , சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 8 ம் வகுப்பு  முதல் 12    வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற 17 முதல் 28  வயது வரையில் உள்ள வாலிபர்களுக்கு ராணுவத்தில் சேர ஆள் சேர்ப்பு முகாம் நெய்வேலியில் வரும் 18 ம தேதி முதல் 23 ம தேதி வரையில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.dailythanthi.com/node/28967  என்ற இணைய தள முகவரிக்கு சென்று பார்க்கவும்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வந்தாச்சு பெங்களூர் டு புதுச்சேரி புதிய இரயில் சேவை வாரம் மூன்று முறை


விழுப்புரம் , திருகோயிலூர் மற்றும் திருவண்ணாமலை பயணிகள் இனி பெங்களூர் செல்ல அடித்து பிடித்து பேருந்தில் கால் கடுக்க நின்று கொண்டெல்லாம் பயணம் செய்ய தேவை இல்லை. உங்களுக்காக புதிய இரயில் சேவை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் , திருகோயிலூர், திருவண்ணாமலை, காட்பாடி , ஜோலார்பேட்டை , கிருஷ்ணராஜபுரம் , எஸ்வந்தபூர் வழியாக மும்பை வரை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்று(6 /11 /2012 )  முதல் தனது சேவையை புதுச்சேரியில் இருந்து தொடங்குகிறது 

புதுச்சேரியில் இருந்து ஞாயிறு , செய்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 8 .15  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சுமார் 6  மனை அளவில் பெங்களூர் (  எஸ்வந்தபூர் ) சென்றடையும்.

மறுமார்கமாக பெங்களூர் (  எஸ்வந்தபூர் ) இல் இருந்து திங்கள் , செய்வாய் மற்றும் சனி கிழமைகளில் 8 .50  மணிக்கு புறப்பட்டு அதே வழியில் காலை 8 மணிக்கு புதுச்சேரி சென்றடயும்.
இது ஏற்கனவே இயங்கும் ஏழைகள் ரதம் போல் இல்லாமல் சாதாரண ரயில் சேவையாக இருக்கும்.

திங்கள், 5 நவம்பர், 2012

இரயில் தொலைக்காட்சி சேவை அறிமுகம்


சென்ற வாரம் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்ய ஏறியபோது ஒரு ஆச்சர்யம் என்னை வரவேற்றது, எனக்கு மட்டும் அல்லாது பலருக்கும் அது ஆச்சர்யத்தை கொடுத்திருக்கும்.ஆம் நான் இங்கு ஆச்சர்யம் என்று குறிப்பிடுவது புதிதாக இரயில் பெட்டிகளில் அறிமுகப்படுத்தி  இருக்கும்  தொலைக்காட்சி சேவை. இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தி என்னவென்றால் நமது அரசு பேருந்துகளில் இருப்பதை போல்  செவிகளை பதம் பார்ப்பதில்லை, மாறாக அளவுக்கு ஏற்றாற்போல் இருப்பது நன்றாயிருக்கிறது.இரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்கு பல சேவைகளை அறிமுகபடுத்தி வருவது மகிழ்ச்சியான ஒரு செய்தி என்றாலும், எவ்வளவோ ஊர்களுக்கு இன்னும் இரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவில்லை இன்னும் சொல்லபோனால் இரயில் வழித்தடங்களே இல்லாத ஊர்களும்  இருக்கத்தான் செய்கின்றன. இது போன்றவற்றில் இரயில்வே நிர்வாகம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.என்பது என்னைபோன்ற இரயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.

தொலைக்காட்சி சேவை
ஒரு ரயில் பெட்டிக்கு சுமார் நான்கு தொலைகாட்சி பெட்டிகள் இரயில்  பெட்டியின் மேற்கூரைகளில் தொங்க விட்டாற்போல் அமைக்கப் பெற்றுள்ளன.மேலும் காட்சிகள் துல்லியமாக இருக்கின்றது. த்ரந்ழ விசியன் என்னும் தனியார் அமைப்பு இதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.இந்த தொலைக்காட்சி பெட்டிகள்  சரியாக இயங்குகின்றனவா என்று  சோதனை செய்ய ஆட்களை நியமித்திருக்கிறார்கள், அவர்கள் அடிக்கடி வந்து சோதனை செய்கிறார்கள்.அனைத்து தொலைகாட்சி பெட்டிகளையும் ஒருங்கிணைத்து கணிபொறி மூலம் இயக்குகிறார்கள்.

நிகழ்சிகள் 
முதலில் இந்தியில் எதோ நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை  ஒளிபரப்பினார்கள், அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் விஜய் t .v  யின் ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள், அதன் பிறகு சுமார் அரைமணி நேரம் கன்னட பாட்டு போட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இறுதியாக இந்தி படம் ஒன்றை ஒளிபரப்பினார்கள்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.