வட்டார வழக்கு என்றாலே எப்போதும் சென்னை வட்டார வழக்கு , கோவை , மதுரை , நெல்லை வட்டார வழக்குகள் என்ற நிலைமைதான் உள்ளது. ஒரு புதிய முயற்சியாக
எனது சொந்த ஊரான பண்ருட்டி வட்டார வழக்கு சொற்களை இந்த பதிவில் பார்ப்போம் .
ஆப்பிட்டுகிச்சி - கிடைத்துவிட்டது
ஊட்டி - கழுத்து
கானாடிஞ்சிட்டது - காணமல் போய் விட்டது
கொல்லி - கொல்லை அல்லது வயல்
மல்லாட்டை - நிலக்கடலை
பயிறு - பயறு , பருப்பு
பானையன் - பானை போன்ற வயிறு உள்ளவன்
மோட்டுவளை - கூரை வீட்டின் மேற்பகுதி
கருமாதி - கருமகாரியம்
காரியம் - திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள்
குடிநுழைதல் - புதுமனை புகுவிழா
ஆயா - பாட்டி
குந்து - உட்கார்
நேகுட்டி - நாய்
சொடலை - சுடுகாடு
பாக்கு மாத்துதல் - நிச்சயதார்த்தம்
ஆக்கிபோடுதல் - விருந்து வைத்தல்
ஒழுங்கி - சிறு வழி அல்லது சிறிய மண் பாதை
பில்லு - புற்கள்
மோடு - மேடு