வியாழன், 18 டிசம்பர், 2008

என் காதல்!

நாட்கள் ஒடின‌
என் காதலும் வளர்ந்தது!
கருவுற்ற பெண்ணின்
வயிற்றைப் போல‌
என்றாவது ஒரு நாள்
வெளியில் தெரியப் போவுது
என் காதல்!

சொந்தங்கள் மறுத்து காதல்
கை கூடவில்லை என்றால்
செத்துவிடுவேன் என்றாய்!.
தினம் தினம் நீ
என்னைப் பிரியும் போது
நான் சாவதை மறந்து!