சனி, 29 நவம்பர், 2008

தண்ணீர் சுடும்.

நம் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தண்ணீர் பிரச்ச‌னையாகும்.இது இரு மாநிலங்களுக்கு இடையோ அல்லது இரு ஊர்களுக்கு இடையோ இருப்பதை நான் கண்கூடாக பார்க்கிறோம்.இதற்கு காரணமாக இருப்பது தண்ணீரை முறையாக பயன்படுத்தாதும், மேலும் மழை பொழிவதற்கு காரணமாக இருக்கும் மரங்களை வளர்க்காமல் வெட்டுவதுமே ஆகும். இதில் முதல் காரணமான தண்ணீரை முறையாக பயன்படுத்தாமையே, இதை தடுக்க நாம் தினந்தோறும் தண்ணீரை பயன்படுத்தும் போது சிறிது கவணமாக இருந்தாலே போதுமானது.

ஆனால் நானே பலபேர் தண்ணீரை விரயம் செய்வதை பார்த்திருக்கிறேன், சிலரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என சொல்லியும் இருக்கிறேன். எனது அலுவலகத்தில் தினந்தோறும் நடைபெறும் சம்பவம் இது.சிற்றுண்டியில் கைகழுவி முடித்தவுடன் அப்படியே மூடாமல் திறந்து விட்டுவிட்டு செல்வார்கள் சிலர். இதுபோல சிறு சிறு செயல்களில் கவணமுடன் இருந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஒரளவாவது தடுக்கலாம்.  


அடுத்த பிரச்சனையான மரங்களை வெட்டுவதை தடுப்பது இயலாத காரணம்.ஆமாம் வளரும் நாடுகளின் கட்டுமானப் பணிகள் மற்றும் நகரமயமாதல் ஆகியவகைகளுக்கு மரம் இன்றியமையாத பொருளாகும்.
எனவே மரம் வெட்டுவதை எதிர்த்து குரல் எழுப்புவதை விட மரம் நடும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சி செய்தாலே போதுமானது.அதாவது ஒரும் மரம் வெட்டினால் இரு மரக்கண்றுகள் நடும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது. இதை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடைபிடித்தாலே போதும் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற தட்டுப்பாட்டை தடுத்து விட முடியும்.

இவ்வாறு செய்தால் தண்னீர் சுடுவதை தவிர்க்கலாம், இல்லை என்றால் இந்த தண்ணிர் சுடுவது நிச்சயம்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக