திங்கள், 24 நவம்பர், 2008

விஜய்,அஜித்,மாதவன்

இது கதை அல்ல நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.

ஓரு முறை நானும் எனது நண்பர்களும் கல்லூரி முடிந்த்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எதிரே வந்த மூன்று பெண்கள் கையில் பெரிய தாம்புளம், அதில் ஒரு சாமிப்படம் "என்ன சாமி என்று கவணிக்க வில்லை" மற்றும் விபூதி, குங்குமம் ஆகியவைகளை வைத்துக் கொண்டு. "சார் எங்க அக்கா! கல்யாணம் ஆகிட்டா! பிச்சை எடுத்து அந்த காசை உண்டியல்ல போடுறேன்னு கோயிலுக்கு வேண்டிக்கிட்டாங்க!". அதனால உங்களால் முடிந்ததை இந்த தட்டில் போடுங்க என்று. கொஞ்சம் விபூதியை கொடுத்தனர்.

இது ஏமாற்று வேலை என உணர்ந்து கொண்ட நாங்கள். அதல்லாம் தரமுடியாது என்று கூற அவர்கள் சென்றுவிட்டனர். "எத்தனை முறைதான் நாங்களும் ஏமாறுவது".

சற்று தூரம் சென்ற அவர்கள் "ஏய் விஜய்,அஜித்,மாதவா கையில்ல காசு இல்லனா எங்க கூட வாங்க". என்று கோரசா கத்த.எங்களுக்கோ ஒரே அவமானம். உங்களுக்கு திமிர்தான் என நினைத்துக்கொடண்டு சென்றோம். வேறேன்ன செய்ய முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக