வியாழன், 31 மே, 2012

பெங்களூர் - கடலூர் - நாகூர் பயணிகள் ரயில் சேவை ஜூலை 1 தேதி முதல் தொடக்கம்

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட, பொதுமக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் மற்றும் நாகூர் இடையிலான ரயில் சேவை வருகின்ற ஜூலை 1 தேதி முதல்  இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிகாலையில் நாகூரில் இருந்து புறப்படும் பயணிகள் இரயில் கடலூர் துறைமுகம் , வடலூர் , விருத்தாசலம், ஆத்தூர் , சின்ன சேலம் , சேலம் , ஓசூர்  வழியாக பெங்களூரை மாலை சுமார் 6 .30  மணியளவில் சென்றடையும்.
 மறுமார்கத்தில்  பெங்களூரில் இருந்து காலை 7 .30  மணிக்கு புறப்படும் இரயிலானது ஓசூர் , சேலம், சின்ன சேலம், ஆத்தூர், விருத்தாசலம், வடலூர், கடலூர் துறைமுகம் வழியாக நாகூரை மாலை சென்றடையும்.
இது நிச்சயமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு இனிய செய்தியாக இருக்கும்.
இரயில் சேவையில்   பல ஆண்டுகளாக  மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்றால் அது கடலூர் மாவட்டமாக தான் இருக்கும். அதுவும் கடலூரிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால் அந்த கொடுமையை சொல்லி மாளாது  அதை அனுபவித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும், அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் என்றால் பெங்களூர் செல்லும் பயணிகள் பாடு திண்டாட்டம் தான். இந்த அறிவிப்பின் மூலம் பல ஆயிரம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

2 கருத்துகள்:

  1. Good News for all cuddalore passenger....

    If u know tell me ,,train name and train No?

    பதிலளிநீக்கு
  2. Thanks Raja ...

    It's salem - Bangalore passenger train, which will be extended till nagore.
    Train No is :

    Salem(Nagore) to Bangalore : 56513
    Bangalore to Salem(Nagore) : 56514

    பதிலளிநீக்கு