புதன், 31 அக்டோபர், 2012

பண்ருட்டி வட்டார வழக்கு சொற்கள் - I


வட்டார வழக்கு என்றாலே  எப்போதும் சென்னை வட்டார வழக்கு , கோவை , மதுரை , நெல்லை  வட்டார வழக்குகள் என்ற நிலைமைதான் உள்ளது. ஒரு புதிய முயற்சியாக 
 எனது சொந்த ஊரான பண்ருட்டி வட்டார வழக்கு சொற்களை இந்த பதிவில் பார்ப்போம் .

ஆப்பிட்டுகிச்சி - கிடைத்துவிட்டது 
ஊட்டி - கழுத்து 
கானாடிஞ்சிட்டது - காணமல் போய் விட்டது 
கொல்லி - கொல்லை அல்லது வயல் 
மல்லாட்டை - நிலக்கடலை 
பயிறு  - பயறு , பருப்பு 
பானையன் - பானை போன்ற வயிறு உள்ளவன் 
மோட்டுவளை - கூரை வீட்டின் மேற்பகுதி 
கருமாதி - கருமகாரியம் 
காரியம் - திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் 
குடிநுழைதல் - புதுமனை புகுவிழா 
ஆயா -  பாட்டி 
குந்து - உட்கார் 
நேகுட்டி - நாய் 
 சொடலை - சுடுகாடு 
பாக்கு மாத்துதல் - நிச்சயதார்த்தம் 
ஆக்கிபோடுதல் - விருந்து வைத்தல் 
ஒழுங்கி - சிறு வழி அல்லது சிறிய மண் பாதை

பில்லு - புற்கள் 
மோடு - மேடு 

3 கருத்துகள்:

  1. எம்பளது- எண்பது
    இதை விட்டுவிட்டீர்களே. இவை பண்ருட்டி வட்டாரத்தில் மட்டுமல்ல பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் வழங்கப்படுபவை. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி!!!!....
    நினைவூட்டியதற்கு மிக்க நன்றி ... நிச்சயம் அடுத்தப்பதிவில் மேலும் பல சொற்களை பதிவு செய்கிறேன்!!!!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள தமிழ் அன்பர்களே, வணக்கம். நான் தமிழ் வட்டார வழக்குகளைப்பற்றி சற்று அறிய விரும்புகிறேன். அதற்கு உங்கள் உதவி மிகவும் தேவை. நன்றி.
    அறியவேண்டியது:
    "அவர்கள் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனார்கள்"
    இந்த வாக்கியத்தை திருநெல்வேலி, சிவகாசி/விருதுநகர், தஞ்சாவூர், கோவை (கோயம்புத்தூர்), வேலூர், யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, போன்ற இடங்களிலுள்ள வட்டார வழக்குகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி. எனது மின்னஞ்சல் rbgrubh@hotmail.com

    பதிலளிநீக்கு