புதன், 13 ஜூன், 2012

கொடுமணல் - தமிழனின் வரலாற்று புதையல் (பாகம் 1 )




புதுச்சேரி பல்கலை கழகத்தின் வரலாற்று பேராசிரியர்  திரு.ராஜன் , 6  பிஎச்டி மாணவர்கள் , நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பல உள்ளூர் மக்களின் உதவியுடன் கடந்த இரண்டு மாத காலமாக ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ள கொடுமணல் என்னும் கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்கு கண்டுபிடித்த பல பொருட்கள் தமிழனின் வரலாற்று பெருமைக்கு மேலும் பெருமைசேர்க்கும் ஒரு மணிமகுடமாக இருக்கும். இவை அனைத்து சுமார் 2500  ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  அதிலும் அவர்கள் கண்டறிந்தது நூற்றில் ஓரு பங்குதான் என்று திரு.ராஜன் அவர்களே கூறுகிறார் மேலும் அந்த படுக்கையை மொத்தமாக அகழ்வு செய்ய குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு  மேலாகும் என்று கூறுகிறார்.


                                                       Courtesy : The Hindu
கொடுமணலில் காணப்படும் தொழிற்சாலை போன்று இந்து வரை இந்தியாவில் எந்த அகழ்வாரய்ச்சியிலும் கண்டறியப்படவில்லை என்ற செய்தி தமிழன் தான் உலகிற்கே முன்னோடியாக பல துறைகளில் சிறந்து விளங்கினான் என்பது தெளிவாகிறது.இந்த தொழிற்ச்சாலையில் இரும்பு , துணி வகைகள் மற்றும் சங்கு வளையல்கள் போன்றவைகளை உற்பத்தி செய்துள்ளனர்.


தொழிற்சாலை
இரும்புதாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுக்கும் ஒரு தொழிற்சாலை போன்றதொரு அமைப்பை திரு.ராஜன் அவர்களின் குழு  கொடுமணலில்  கண்டுபிடித்துள்ளது.  இதை உறுதிபடுத்தும் விதமாக இதற்கு முன்னர் சென்னிமலை அருகே இருபுத்தாது படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.சென்னிமலையில் எடுக்கப்பட்ட இரும்புத்தாதுக்களை கொடுமணலில் பிரித்தெடுத்து அதை  பல தேசங்களுக்கும் ஏற்றுமதி செய்துள்ளனர்.மேலும் குதுப்மினாரில் உள்ள துருப்பிடிக்காத பழங்கால தூண் இங்கு தயாரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது. இதை உறுதி செய்யும் விதமாக இங்கு பல வட இந்திய எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.இதிலிருந்து இந்த இடம் தொழிற்சாலையாக மட்டும் இல்லாமல் அந்த பொருட்களை வெளி இடங்களுக்கு வர்த்தகம் செய்யும் இடமாகவும் இருந்திருக்கிறது.

இதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட  பழங்கால  உடைந்த பானையின்  ஓடுகள் கிடைத்துள்ளது. அதில் "சம்பன் சுமணன்" என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன். இதிலிருந்து இந்த தொழிற்ச்சாலையின் உரிமையாளராக அவர்கள் இருக்ககூடும் என்று தெரிகிறது. இந்த பிராமி எழுத்துக்களானது சங்க கால இடங்களான பூம்புகார் , கொற்கை போன்ற இண்டங்களில் கிடைக்கப்பெற்ற எழுத்துக்களை விட அதிகம் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறும் தகவல்கள் வியக்கும் வண்ணம் உள்ளது. இங்கிருந்து ரோம் போன்ற நாடுகளுக்கு இரும்பை ஏறுமதி செய்துள்ளனர் என்கிறார்கள் அவர்கள்,

( தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக