வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Part-II வேங்கையின் மைந்தன்- முதலாம் இராஜேந்திரன்

        இதற்கிடையில் தப்பியோடிய மகிந்தன் மகன் மற்றும் அமைச்சர் மெய்கீர்த்தி ஆகியோர் சோழர்களை பழிவாங்க துடிக்கின்றனர். மன்னன் ராஜேந்திரன் இலங்கை போரிலே பெரும்பான்மையாக கலந்து கொண்ட வீரர்களுக்கு பரிசாக புதிய தலைநகர் ஒன்றை அமைத்து அதற்கு சோழபுரம் என்ற பெயரை வைப்பதற்கான திட்டத்தை வகுக்கிறார். மேலும் அந்த நகரில்  தஞ்சை பெரிய கோவில் போல  மிகப்பெரிய ஒரு ஆலயத்தை நிர்மாணிக்கவும் சொல்கிறார்.
இன்னொருபுறம் மதுரையில் ஒரு கோட்டையை நிர்மாணிக்கவும் உத்தரவிடுகிறார் இதை அறிந்த பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சினம் கொண்டு இரகசியமாக படை திரட்டி போரிட துணிகிறான். இதற்கு உதவியாக இளங்கோவின் நண்பன் வீரமல்லனின் உதவியை சுந்தர பாண்டியன் அமைச்சர் உதவியுடன் பெறுகிறார். ஏற்கனவே இளங்கோவின் புகழின் மேல் பொறாமை கொண்ட வீரமல்லன், ரோகிணியின் அழகில் மயங்கி எப்படியாவது சோழர்படைகளை வெல்வதற்கு சுந்தர பாண்டியனுக்கு உதவியாக இருந்தால்  தானும் ஒரு சிறிய நாட்டிற்காவது  அரசனாகிவிடலாம் அப்புறம் ரோகினியை மணப்பது எளிது என்று எண்ணி அவர்களின் திட்டத்திற்கு  உதவுவதாக வாக்களிக்கிறான்.
வடக்கே சென்ற சோழர்படைகள் வாதாபியை  வெற்றி கொண்ட செய்தி அறிந்த ராஜேந்திரன், அப்படைகளை மேலும் முன்னோக்கி கங்கை வரை சென்று தீர்த்தம் கொண்டுவர உத்தரவிடுகிறார்.மேலும் வழியில் இருக்கும் நாட்டின் அரசர்கள் பணியாவிட்டால் அவர்களை வென்று முன்னேறும் படி சொல்கிறார்.ஆறுமாதகாலம் கழித்து சோழர்படைகள் கங்கை தீர்த்ததுடன் திரும்பி வருகின்றன இந்த வெற்றியின் நினைவாக தான் புதிதாக நிர்மாணித்திருக்கும் சோழபுரத்திற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை சூட்டுகிறார். சோழ நாடே கங்கை கொண்ட சோழபுரத்தில் திரண்டு வெற்றி விழா கொண்டாடுகிற  நேரத்தில் இளங்கோவின் கொடும்பாளூரை முற்றுகையிட்டு தீக்கிரையாகுகின்றன பாண்டியபடைகள், மேலும் அதே நேரத்தில் வெற்றி விழாவிற்குள் மாறுவேடத்தில் புகுந்து குழப்பத்தை விளைவித்து கைபற்றி விடவேண்டும் என்ற நோக்குடன் வருகின்றனர் பாண்டிய படைகள். இதனை ரோகிணியின் மூலன் அறியும் இளங்கோ பாண்டியர் படைகளை துரத்தி அடிப்பதுடன் மகிந்தன் மகன் காசிபனையும் கொலை செய்கிறான். இளங்கோவிடம் உயிர் பிச்சை பெரும் நண்பன் வீரமல்லன் மனம் திருந்தி இறக்கும் தருவாயில் இருக்கும் ரோகினியை காப்பற்றி இளங்கோவிடம் ஒப்படைக்கிறான்.
ராஜேந்திரன் மதுரையில் அமைக்கபட்ட புதிய கோட்டையில் தன் மகனுக்கு சுந்தர பாண்டியன் என்பெயரிட்டு பாண்டிய மணிமுடியை அவனுக்கு அணிவித்து பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். இளங்கோ தன்னை காதலித்த ராஜேந்திரன் மகள் குந்தவை மற்றும் ரோகினியை மணந்து கொள்கிறான்.
இதற்கிடையில் சிங்கள் அமைச்சர் மெய்கீர்த்தின் சதியால் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கும் சோழ வணிகர்கள்  ரோகன படைகளால்(இந்தோனேசியா)  தாக்கபடுகிறார்கள். அவர்களை காக்கவும் ரோகனத்தை கைபற்றவும் இளங்கோ படையுடன் புறப்பட்டு வெற்றி பெற்று திரும்புகிறான்.
முடிந்தது

4 கருத்துகள்: