திங்கள், 23 ஜூலை, 2012

கல்கியின் பார்த்திபன் கனவு

ஒரு திரில்லர் படத்திற்கு இணையான  கதை ஓட்டம், படிக்க படிக்க அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்று சில  இடங்களில் பட படக்க வைக்கிறது. சிவகாமியின் சம்பதம் படித்தபின் இதை படித்தால் தான் கதையின் முழு சுவாரசியத்தையும் அனுபவிக்க முடியும். கதை என்னெவோ பல்ல மன்னன் நரசிம்ம சக்கரவர்த்தியை சுற்றி நகர்ந்தாலும். கதையின் நாயகர்கள் சோழ மன்னன் பார்த்திபனும் அவனது மகன் விக்கரமனும்தான். அந்த காலத்தில் தமிழகத்தில் நிலவிய  நரபலி கொடுப்பது மற்றும் தன்னையே நரபலியாக்கிகொள்வது போன்ற கொடிய பழக்கங்கள் பற்றி கல்கி அவர்கள் விவரித்திருக்கும் விதம் ரொம்பவும்  அருமை.நாவலின் இன்னமொரு அம்சம் என்னவென்றால் வரலாற்றில் மிகவும் பிரபலமான சீன பயணி யுவான் சுவாங் மாமல்லபுரத்திற்கு வருகை தந்த நிகழ்வு இதில் பதியப்பட்டுள்ளது.மேலும் சாதரணமான ஓடக்காரன் பொன்னன் மற்றும் அவன் மனைவி வள்ளி இவர்கள் இருவரும் கதை முழுக்க விக்கிரமனுக்கு உதவும் காதாபாதிரங்களாக வருவார்கள்.

கதை சுருக்கம்:
  பல்லவ அரசின் கீழ் இருக்கும் சோழ மன்னன் பார்த்திப சோழன் ஆறு ஆண்டுகளாக கப்பம் கட்ட மறுத்து நரசிம்ம பல்லவரை போருக்கு அழைக்கிறான், ஆனால் போரில் தோற்று போகிறான். இறக்கும் தருவாயில் சிவனடியார் ஒருவரிடம் தன மகனை ஒரு சிறிய சுகந்திர நாட்டிற்காவது அரசனாக்கி , அதன் பிறகு சோழர்களின் பரம்பரை மணிமகுடத்தை ஒப்புவிக்குமாறு கூறி சத்தியம்  வாங்கிகொண்டு இறக்கிறார். சில வருடங்கள் கழித்து ஓடக்காரன் பொன்னன் உதவியுடன் பல்லவ கொடியை இறக்கி சோழர் கோடியை ஏற்றும் முயற்சியில், அவன் சித்தப்பா மாரப்ப பூபதியின் சூழ்ச்சியால்  நரசிம்ம பல்லவரால்  நாடுகடத்தப்படுகிறான் விக்கிரமன். இதற்கிடையில் நரசிம்ம பல்லவர் நரபலி கொடுக்கும் கூட்டத்தை கண்டுபிடித்து அதை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மேலும் விக்கிரமனின் தாய் அருள் மொழி தேவியை நரபலி கொடுக்கும் கபாலிகர்கள் கடத்தி செல்கின்றனர். நரசிம்ம பல்லவரின் புதல்வி குந்தவி விக்கிரமன் மீது  காதல் கொண்டு அவனை கானத்துடிக்கிறாள். நரசிம்ம பல்லவரின் முயற்சி வென்றதா? குந்தவி காதலனை கைப்பிடித்தாளா? விக்கிரமன் பார்த்திபன் கனவை மெய்ப்பித்தான? விகிரன்மன் தாய்  மீட்கப்பட்டாளா?  போன்ற கேள்விகளுக்கு விடையுடன்  கதை முடிக்கபட்டிருக்கும்.
பார்த்திபன் கனவு தான் கல்கி எழுதிய சரித்திர நாவல்களில் மிகச்சிறியது.இது சிவகாமியின் சபதத்தின் இரண்டாம் பாகம் என்றே கூறலாம்.அந்த அளவிற்கு சிவகாமியின் சபதத்தின் வரும் கதாபாத்திரங்கள் சற்றே வயது முதிர்ந்த வேடத்தில்  பார்த்திபன் கனவில்  வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக