வெள்ளி, 30 நவம்பர், 2012

முந்திரி பலா அப்புறம் பண்ருட்டி

நான் சிறுவயதாக இருக்கும் போது  அதாவது இன்றில் இருந்து சுமார் 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில்  முந்திரி நிலபரப்பு மிகவும் குறைவு , ஊரை விட்டு வெளிப்புறமாக இருக்கும் நிலங்களிலும் , பொட்டல் மண் நிலங்களில் மட்டுமே பயிர் செய்யப்பட்டு வந்த முந்திரி இப்போது அனைத்து நிலங்களிலும் முந்திரி என்ற நிலைக்கு வந்து விட்டது. இதற்கு காரணம் பருவ மழை பொய்த்து, முதலில் இரண்டு போகம் அறுவடை செய்த  நிலை ஒரு போகமாக மாறி பின்பு அதுவும் இல்லாமல் வெறும் முந்திரியை மட்டுமே நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.முதல்  போகமாக மணிலா அல்லது கம்பு , இரண்டாம் போகமாக உளுந்து அல்லது கேழ்வரகு பயிரிடுவது வழக்கம்.

உணவுத் தேவையில் பெரும்பகுதியை கம்பு, உளுந்து  மற்றும் கேழ்வரகு கொண்டே நிறைவு செய்வோம். பெரும்பாலும் ஒரு வேளை  மட்டுமே சோறு மற்ற இரு வேலைகள் கம்பு அல்லது கேழ்வரகு உணவுகள்தான்.இந்த நிலை இப்போது முற்றிலும் மாறி மூன்று வேளையும்  அரிசி உணவுகளே. கேழ்வரகு மற்றும் கம்பு இருந்த இடமே இப்போது இல்லை, எந்த வீட்டிலும் அதை சமைப்பது இல்லை.

நன்மை 
முந்திரியில் இருக்கும் ஒரே நன்மை என்னவென்றால் நாம் அதை  பராமரிக்க தேவையே இல்லை, மழை பெய்யும் போது  உரமிடல் மற்றும் பூ பூக்கும் நேரத்தில் பூச்சி மருந்து தெளித்தல் வேண்டும். இவை இரண்டும் வருடத்திகு ஒரு முறை மட்டுமே.



வருமானம் 
 ஒரு ஏக்கர் இருந்தால் சுமார் 20000 வரை ஒருவருடத்தில் கிடைக்கும் அதுவும் அனைத்து செலவுகளும் போக சுமார் 15000 மட்டுமே மிஞ்சும், இந்த காலத்தில் இந்த தொகை ரொம்ப சொற்பம்.இதனாலேய முந்திரி மாறும் அதனை சார்ந்த தொழில்களை வருடம் முழுவதும் நடக்கும். கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும், எங்கள் ஊரிலேய வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பை ஏறுமதி செய்யும் உள்ளூர்  முதலாளிகள்  உள்ளனர்.மேலும் அறுவடை காலத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய ஆட்களும் வருவது உண்டு. 

வருமானம் 
எண்கள்   ஊரின் மற்றொரு சிறப்பு பலா, பெரும்பாலும் முந்திரியின் நடுவே ஊடுபயிராக பயிர் செய்யப்படுவதுதான் பலா,  முந்திரிகாவது மருந்து அடிக்க வேண்டும் மாறும் உரமிட வேண்டும், பலா மரத்திற்கு எதுவும் தேவை இல்லை. இது வருடத்திகு ஒருமுறை பலன் தரக்கூடியது. முந்திரி பலன் தரும் அதே கால கட்டத்தில் தான், பலாவும் பலன் தரும்.பலா குறைந்த அளவே பயிரிடபட்டிருக்கும்.


புதன், 7 நவம்பர், 2012

நெய்வேலியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்


கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விழுப்புரம் , வேலூர் , பாண்டிச்சேரி , சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 8 ம் வகுப்பு  முதல் 12    வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற 17 முதல் 28  வயது வரையில் உள்ள வாலிபர்களுக்கு ராணுவத்தில் சேர ஆள் சேர்ப்பு முகாம் நெய்வேலியில் வரும் 18 ம தேதி முதல் 23 ம தேதி வரையில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.dailythanthi.com/node/28967  என்ற இணைய தள முகவரிக்கு சென்று பார்க்கவும்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வந்தாச்சு பெங்களூர் டு புதுச்சேரி புதிய இரயில் சேவை வாரம் மூன்று முறை


விழுப்புரம் , திருகோயிலூர் மற்றும் திருவண்ணாமலை பயணிகள் இனி பெங்களூர் செல்ல அடித்து பிடித்து பேருந்தில் கால் கடுக்க நின்று கொண்டெல்லாம் பயணம் செய்ய தேவை இல்லை. உங்களுக்காக புதிய இரயில் சேவை புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் , திருகோயிலூர், திருவண்ணாமலை, காட்பாடி , ஜோலார்பேட்டை , கிருஷ்ணராஜபுரம் , எஸ்வந்தபூர் வழியாக மும்பை வரை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்று(6 /11 /2012 )  முதல் தனது சேவையை புதுச்சேரியில் இருந்து தொடங்குகிறது 

புதுச்சேரியில் இருந்து ஞாயிறு , செய்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 8 .15  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சுமார் 6  மனை அளவில் பெங்களூர் (  எஸ்வந்தபூர் ) சென்றடையும்.

மறுமார்கமாக பெங்களூர் (  எஸ்வந்தபூர் ) இல் இருந்து திங்கள் , செய்வாய் மற்றும் சனி கிழமைகளில் 8 .50  மணிக்கு புறப்பட்டு அதே வழியில் காலை 8 மணிக்கு புதுச்சேரி சென்றடயும்.
இது ஏற்கனவே இயங்கும் ஏழைகள் ரதம் போல் இல்லாமல் சாதாரண ரயில் சேவையாக இருக்கும்.

திங்கள், 5 நவம்பர், 2012

இரயில் தொலைக்காட்சி சேவை அறிமுகம்


சென்ற வாரம் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்ய ஏறியபோது ஒரு ஆச்சர்யம் என்னை வரவேற்றது, எனக்கு மட்டும் அல்லாது பலருக்கும் அது ஆச்சர்யத்தை கொடுத்திருக்கும்.ஆம் நான் இங்கு ஆச்சர்யம் என்று குறிப்பிடுவது புதிதாக இரயில் பெட்டிகளில் அறிமுகப்படுத்தி  இருக்கும்  தொலைக்காட்சி சேவை. இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தி என்னவென்றால் நமது அரசு பேருந்துகளில் இருப்பதை போல்  செவிகளை பதம் பார்ப்பதில்லை, மாறாக அளவுக்கு ஏற்றாற்போல் இருப்பது நன்றாயிருக்கிறது.இரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்கு பல சேவைகளை அறிமுகபடுத்தி வருவது மகிழ்ச்சியான ஒரு செய்தி என்றாலும், எவ்வளவோ ஊர்களுக்கு இன்னும் இரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவில்லை இன்னும் சொல்லபோனால் இரயில் வழித்தடங்களே இல்லாத ஊர்களும்  இருக்கத்தான் செய்கின்றன. இது போன்றவற்றில் இரயில்வே நிர்வாகம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.என்பது என்னைபோன்ற இரயில் பயணிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.

தொலைக்காட்சி சேவை
ஒரு ரயில் பெட்டிக்கு சுமார் நான்கு தொலைகாட்சி பெட்டிகள் இரயில்  பெட்டியின் மேற்கூரைகளில் தொங்க விட்டாற்போல் அமைக்கப் பெற்றுள்ளன.மேலும் காட்சிகள் துல்லியமாக இருக்கின்றது. த்ரந்ழ விசியன் என்னும் தனியார் அமைப்பு இதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.இந்த தொலைக்காட்சி பெட்டிகள்  சரியாக இயங்குகின்றனவா என்று  சோதனை செய்ய ஆட்களை நியமித்திருக்கிறார்கள், அவர்கள் அடிக்கடி வந்து சோதனை செய்கிறார்கள்.அனைத்து தொலைகாட்சி பெட்டிகளையும் ஒருங்கிணைத்து கணிபொறி மூலம் இயக்குகிறார்கள்.

நிகழ்சிகள் 
முதலில் இந்தியில் எதோ நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை  ஒளிபரப்பினார்கள், அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் விஜய் t .v  யின் ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள், அதன் பிறகு சுமார் அரைமணி நேரம் கன்னட பாட்டு போட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இறுதியாக இந்தி படம் ஒன்றை ஒளிபரப்பினார்கள்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

புதன், 31 அக்டோபர், 2012

பண்ருட்டி வட்டார வழக்கு சொற்கள் - I


வட்டார வழக்கு என்றாலே  எப்போதும் சென்னை வட்டார வழக்கு , கோவை , மதுரை , நெல்லை  வட்டார வழக்குகள் என்ற நிலைமைதான் உள்ளது. ஒரு புதிய முயற்சியாக 
 எனது சொந்த ஊரான பண்ருட்டி வட்டார வழக்கு சொற்களை இந்த பதிவில் பார்ப்போம் .

ஆப்பிட்டுகிச்சி - கிடைத்துவிட்டது 
ஊட்டி - கழுத்து 
கானாடிஞ்சிட்டது - காணமல் போய் விட்டது 
கொல்லி - கொல்லை அல்லது வயல் 
மல்லாட்டை - நிலக்கடலை 
பயிறு  - பயறு , பருப்பு 
பானையன் - பானை போன்ற வயிறு உள்ளவன் 
மோட்டுவளை - கூரை வீட்டின் மேற்பகுதி 
கருமாதி - கருமகாரியம் 
காரியம் - திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் 
குடிநுழைதல் - புதுமனை புகுவிழா 
ஆயா -  பாட்டி 
குந்து - உட்கார் 
நேகுட்டி - நாய் 
 சொடலை - சுடுகாடு 
பாக்கு மாத்துதல் - நிச்சயதார்த்தம் 
ஆக்கிபோடுதல் - விருந்து வைத்தல் 
ஒழுங்கி - சிறு வழி அல்லது சிறிய மண் பாதை

பில்லு - புற்கள் 
மோடு - மேடு 

சனி, 27 அக்டோபர், 2012

கங்கை கொண்ட சோழபுரம் கோவில் படங்கள்

கோவில் முகப்பு தோற்றம் 

கோவில் முன்பு உள்ள நந்தி




கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகள்  

கோவில் பக்கவாட்டில் உள்ள நுழைவு வாயில் 


வெள்ளி, 26 அக்டோபர், 2012

கங்கை கொண்ட சோழபுரம் - பிரம்மாண்டம்


சில மாதங்களுக்கு முன்புதான் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன். அதுவும் இந்த கோவில் தஞ்சை பெரியகோவிலின் பிரதியை போன்றே இருக்கும் என்றும் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அந்த கோவிலை பற்றி மனதில் அவ்வளவாக ஒரு ஆர்வம் ஏற்படவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் உலக பாரம்பரிய சின்னம் என்று தெரிந்தவுடன், எப்படியாவது சென்று பார்த்துவிட முடிவு செய்தேன்.இது என் ஊரில்(பண்ருட்டி அருகில் )  இருந்து கிட்டத்தட்ட 60  கிலோ மீட்டருக்குள் இருக்கிறது என்பதால் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது சென்று பார்த்து விடுவது என தீர்மானித்திருந்தேன். அதன் படி ஒரு விடுமுறை தினத்தன்று சென்னையில் இருந்து ஜெயம்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறி, ஜெயம்கொண்டம் கூட்டு ரோட்டில் இறங்கினேன். அந்த கூட்டு ரோட்டை சுற்றிலும் சில கடைகள் மற்றும் ஆட்டோக்கள் இருந்தன. அருகில் இருந்தவரிடம் இங்கிருந்து எப்படி கோவிலுக்கு செல்வது என்று கேட்டபோது, இந்த வழியாக செல்லும் டவுன் பஸ்ஸில் சுமார் 2  கிலோ மீட்டர்கள் சென்றால் கோவில் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது அங்கே இன்றங்கி கொள்ளுங்கள் என்றார். ஆர்வம் தாங்காமல் ஆட்டோ பிடித்து கோவிலை சென்றடைந்தேன்.

 கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பார்த்து  நிச்சயம் பிரம்மித்து போனேன், அவ்வளவு பிரம்மாண்டம்.... தஞ்சை பெரிய கோவிலை விட பெரிய கோவில் இது ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் சிலை நுட்பம் இந்த கோவிலில் இல்லை என்பதை இதன் பிரம்மாண்டம் மறைத்து விடுகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய முதலாம் ராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கட்டியது. தந்தையின் புகழுக்கு முன்னாள் நாம் காணமல் போய்விடக்கூடாது என்று கருதி இந்த கோவிலை அவர் எழுப்பி இருக்க கூடும். மறுமலர்ச்சி  திரைப்படத்தில் பார்க்கும் போது கூட இதன் பிரம்மாண்டம் தெரியவில்லை.
நான் சென்றது வார நாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை, சில வரலாற்று மாணவர்கள் மற்றும் சில சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். கோவிலுக்குள் நுழையும் போதே மிகப்பெரிய நந்தி சிவலிங்கத்தை நோக்கி அமர்திருப்பதை காண முடிகிறது. அதை அடுத்து விசாலமான மண்டபம். மண்டபத்தில் நான் கண்ட காட்சி என்னை மிகவும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது ஆம் ..... மண்டபத்தின் மேற்கூரையில் மீன் படம் கல்லால் பொறிக்கப் பட்டிருந்தது.
மண்டபத்தை அடுத்து மூலாஸ்தானத்தில் மூலவரான சிவபெருமான் சிவலிங்கமாக காட்சி தருகிறார். கோவிலை சுற்றிலும் பல சிறிய கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. பெரும்பான்மையான சிறு கோவில்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கோவிலை சுற்றிலும் பல சோழர்கால எச்சங்கள் சுற்றிலும் வேலி அமைத்து  பாதுகாக்கப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் எடுக்கப்பட்ட படங்களை அடுத்தபதிவில் பாப்போம்.

வியாழன், 25 அக்டோபர், 2012

ஹைதராபாத் ஐபிஎல் அணியை வாங்கியது சன்கு ழுமம்


மிகபெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக ஹைதராபாத் ஐபிஎல்  அணியை ஏலத்தில் எடுத்துள்ளது கலாநிதி மாறனின் சன் குழுமம். இன்று மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் சுமார்  15 .9 மில்லியன்   டாலர்கள் கொடுத்து ஹைதராபாத்  அணையை தன் வசப்படுத்தியுள்ளது.இன்றில் இருந்து சுமார் 10  ஆண்டுகள்  இந்த அணியானது சன் குழுமம் வசம் இருக்கும். இது வரையில் விளையாட்டு துறையில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டாத சன் முழுமம் ஹைதராபாத் ஐபிஎல்  அணியை வாங்கியதன் மூலம்  முதன் முறையாக விளையாட்டு துறையில் கால்பதித்துள்ளது.இது ஏற்கனவே விமான போக்குவரத்துரையிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பணத்தை IRCTC கணக்கிலே வைத்து கொள்ளும் புதிய முறையை அறிமுகம் செய்கிறது ரயில்வே

ரயில் டிக்கெட் முன்பதிவு  செய்பவர்களுக்கு ஒரு இனிய செய்தி. IRCTC ,  RDS  எனப்படும் புதிய முறையை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதன் மூலம் நீங்கள் முன்கூட்டியே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உங்களின் IRCTC கணக்கிற்கு அனுப்பி விடலாம். இந்த பணத்தை  நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளாம். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு நேரத்தை கணிசமான அளவு குறைக்கலாம். தற்போது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்ட பிறகு நீண்ட நேரம் சென்ற பிறகுதான் IRCTC இனைதளமானது டிக்கெட் முன்பதிவு செய்யும். இனிமேல் இந்த காத்திருப்பு அவசியம் இல்லை நேரடியாக உங்களின் IRCTC கணக்கில் இருந்தே பணத்தை செலுத்தில் உடனடியாக டிக்கெட் முன்பதிவு  செய்து கொள்ளலாம்.

 

மேலும் டிக்கெட்டை நீங்கள் கேன்சல் செய்யும் போது பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேர நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும், இனிமேல் நீங்கள் டிக்கெட்டை கான்செல் செய்த உடன் பணம் உங்களின் IRCTC கணக்கில் வரவு வைக்கப்படும் 

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அருள்மொழி வர்மன் (எ) இராஜ இராஜ சோழன்



சுந்தர சோழனின் கடைசி வாரிசான அருள்மொழி வர்மன் பிற்காலத்தில்  இராஜ இராஜ சோழன் என்ற பெயருடன் சோழநாட்டை ஆட்சி செய்தவன். சோழர்களின் வரலாற்றில் ஏன் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு புகழுடன் ஆட்சி செய்தவன் அருள்மொழிவர்மன். அருள்மொழி வர்மன் சிறுவயதில் இருந்தே  அக்கா குந்தவியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார், குந்தவையும் தம்பி மீது அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.தன் தம்பி நிச்சயம் ஒருநாள் பல தேசங்களுக்கு அரசனாவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
சிறுவயதில் பொன்னி நதி வெள்ளத்தில் அகப்பட்டு இறக்கவிருந்த அருள்மொழி வர்மனை அந்த பொன்னி தேவியே பெண் உருவில் வந்து காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் என்றும் அழைக்கபடுகிறார்.தன்னுடைய இளம் வயதிலேயே பெரும் படைக்கு தலைமை தாங்கி இலங்கையில் சிங்களர்களின் கொட்டத்தை அடக்கவும் பாண்டிய முடியை கொண்டு வரவும் செல்கிறார்.ஆனால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அறிந்து படையை விட்டுவிட்டு சோழநாடு திரும்புகிறார், திரும்பும் வழியிலே பல ஆபத்துகளில் இருந்து தப்பி சோழநாடு வந்து சேர்கிறார்.மக்களின் ஆதரவு அருள்மொழி வர்மனுக்கு இருந்தும் மிக பெருந்தன்மையுடன் அதை விட்டுகொடுத்து தன் சித்தப்பாவை அரசனாக்குகிறார்.

தன்னுடைய அண்ணன் ஆத்தித கரிகாலன் நயவஞ்சகமாக கொல்லப்பட்டவுடன் நாட்டில் ஏற்படும் குழப்பத்தை மிகவும் புத்திசாலிதனமாக கையாண்டு சரிசெய்கிறார். மேலும் ஆட்சி கட்டிலில் யார் அமருவது என்ற குழப்பத்தையும் தெளிவாக கையாண்டு தனது சித்தப்பாவை சோழ அரசனாக்கி சரி செகிறார். அதன் பிறகு சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து அவர் சித்தப்பா இறந்தவுடன் ஆட்சி கட்டிலில் அமருகிறார். அது நாள் வரையிலும் பெரும் படை  திரட்டி கடற்கொள்ளையர்களையும் எதிரிகளையும் அடக்குகிறார். அருள்மொழி வர்மன் தன்னை காதலிக்கும் வானதியை திருமணம் செய்து கொள்கிறார். தான் காதலிக்கும் பூங்குழலியை தன சித்தப்பா சேந்தன் அமுதன் காதலிப்பதை அறிந்து விட்டுகொடுக்கிறார்.  அருள்மொழி வர்மன் அரசனாக பதவி ஏற்கும் போது அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பதாகும்.மேலும் அருள்மொழி அரசனாக பதவி ஏற்கும் முன் அவரது மனைவி தன் சபதப்படி இறந்து விடுகிறார். குடவோலை முறை என்னும் முறையை அறிமுகப்படுத்தி மக்களை ஆளும் அதிகாரிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவந்தது , தஞ்சையில் இன்றுவரையிலும் அழியாப் புகழுடன் விளங்கும் பெரிய கோவிலை ஈழுப்பியது மற்றும்   கடல் கடந்து பல தேசங்களை வென்று புலிக்கொடியை பறக்க விட்டது போன்ற  சாதனைகளை செய்த மாபெரும் வீரன்  தமிழனான   இராஜ இராஜ சோழன் என்பதில் நிச்சயம் நமக்கு பெருமையே .



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வல்லவரையன் வந்தியத்தேவன்


பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பதிவில் எழுத ஆசை. இது  பலருக்கு  இந்த நாவலை படிக்க தூண்டுவதோடு மட்டுமல்லாமல் படிப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.முதலில் கதையின் நாயகனாக வல்லவரையன் வந்தியதேவனை பற்றி பார்ப்போம்.

பழந்தமிழகத்தில் ஒருகாலத்தில் சேர, சோழ , பாண்டிய மன்னர்களை அடக்கி ஆண்ட  வாணர் குலத்தில் பிறந்தவன் வந்தியத்தேவன். அப்படிப்பட்ட புகழ்மிக்க குலத்தில் பிறந்திருந்தாலும் இப்போது அவர்களுக்கு என்று சொந்தமாக ஒரு சிறு ஊர் கூட கிடையாது. மேலும் வந்தியதேவனுக்கு பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ இல்லாத அனாதையாக இருக்கிறான்.அவனுடைய நோக்கமே எப்படியாவது அடுத்து பட்டத்திற்கு வரவிருக்கும் ஆதித்த கரிகாலனின் அபிமானத்தை பெற்று சோழ அரசில் மிகப்பெரிய பதவியை அடைந்து தன் வம்சத்தின் புகழை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்பதாகும். அதற்கு தகுந்தாற்போல் ஆதித்த கரிகாலனின் நண்பனாகி  அவனுடைய அந்தரங்க செய்தியை தந்தை சுந்தர சோழருக்கும் , தங்கை குந்தவிக்கும் கொண்டு செல்கிறான்.ஆனால் செல்லும் வழியில் நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியை கைப்பற்ற ஒருபுறமும் , பாண்டியனின் மரணத்திற்கு பழிவாங்க ஆதித்த கரிகாலனையும் , அருள்மொழி வர்மனையும்   கொல்ல மறுபுறமும் நடக்கும் சதியை கண்டு அதை எப்படியாவது தடுக்க எண்ணுகிறான்.
குந்தவியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவளின் திட்டப்படி இருவரையும் எப்படியாவது காப்பாற்றி அவர்களின் சதியை முறியடிக்கும் பொருட்டு முதலில் அருள்மொழி வர்மன் இருக்கும் இலங்கைக்கு செல்கிறான்.அங்கு அவரை சந்தித்து உண்மைநிலையை விளக்கி அவரை சோழநாடு கொண்டுவருகிறான். உடல்நலமில்லாமல் இருக்கும் அருள்மொழி வர்மனை பாதுகாப்பான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கிறான். இதற்கிடையில் மக்கள் செய்தி அறிந்து அருள்மொழிவர்மனை அடைந்து அவரை ஊர்வலமாக அழைத்து கொண்டு சோழ தலைநகர்  நோக்கி செல்கின்றனர்.

இதற்கிடையில் ஆதித்த கரிகாலனை  சதித்திட்டத்தில் இருந்து காப்பாற்ற தொண்டை மண்டலம் நோக்கி செல்கிறான் வந்திய தேவன் ஆனால் அவன் முயற்சி தோல்வியடைந்து ஆதித்த கரிகாலன் பாண்டியன் ஆபத்துதவிகளாலும், நந்தினி என்னும் பாண்டியனின் முன்னாள் காதலியாலும் படுகொலை செய்யப்படுகின்றான்.இதற்கிடையில் பழுவேட்டரைகள் அருள்மொழிவர்மனின் சித்தப்பாவிற்கு முடி சூட சத்திதிட்டம் செய்கிறார்கள் என்பதை அறிந்து நாட்டில் குழப்பம் ஏற்படுகிறது.அதை எல்லாம் அருள்மொழி வர்மன் களைந்து நாட்டில் அமைதி ஏற்படுத்த வந்தியத்தேவன் உதவி செய்கிறான்.
இறுதில் வந்தியத்தேவன் குந்தவியை மணந்து கொள்கிறான். சோழ அரசனாக அருள்மொழி வர்மனின் சித்தப்பா முடி சூடி கொள்கிறார்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பல்பொருள் வணிக அங்காடி vs ரோட்டோர கடைகள்


நகரங்களில் அதுவும் சென்னை , பெங்களூர் போன்ற நகரங்களில் வாழும் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ரொம்ப கடுப்பா இருக்கு... எதுக்கு எடுத்தாலும் பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எனப்படுகின்ற பல்பொருள் வணிக அங்காடி ஒன்றே கதி என கிடக்கிறார்கள். இந்த கார்பரேட் நிறுவங்களும் அதன்  ஊழியர்களுக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அளவிற்கு கூப்பனை வேற குடுதுடரானுங்க ... அவனுங்களுக்குள்ள என்ன லிங்க்கோ .... இந்த மாதரி கூப்பன் எடுத்து வரவனுங்கள கூட சரி போனாப் போவுதுன்னு மன்னிச்சி விட்டுடலாம் ...



 ஆனா சும்மா 2 ரூபாய்க்கு கருவேப்பிலை வாங்கரதுக்கூட அங்க வந்து வரிசையில் நின்னு வாங்கிட்டே வரவங்கள என்னன்னு சொல்லறது... ஒரு முறை நண்பர்  ஒருத்தர் கூபிட்டாருன்னு நானும் அந்த   பல்பொருள் வணிக அங்காடி போனேங்க... . அங்க நான் பார்த்த காட்சி என்னை அப்படியே கண்கலங்க வைச்சிட்டுது....ஆமாங்க அங்க ஒருத்தன் ஒரே ஒரு கோழி முட்டை வாங்க அந்த கடைக்குள்  வந்து அதற்கு பில் போட வரிசையில் நிக்குறான் ... இன்னும் ஒரு குடும்ப தலைவி அரை லிட்டர் பால் மாறும் ஒரு பிஸ்கட்  பக்கெட்க்கு பில் போட வரிசையில் நிக்குது.... இதை விற்பனை செய்வதற்கே தெருவின் மூலை முடுக்கெல்லாம் சிறிய கடைகளை வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் பெரும்பாலானவர்களை வாழ வைபதற்காகவாவது அவர்களிடம் வாங்க வேண்டாமா? . ரோட்டோரம் கடை வைத்திருக்கும் காய்கறி மற்றும்  பழம் விற்பவர்களின் பாடு இன்னும் சொல்ல முடியாதது இதற்கும் அவர்கள் தின வட்டி மற்றும் மீட்டர் வட்டிக்கு எல்லாம் வாங்கி பிழைப்பு நடத்துபவர்கள். வெறும் கொத்துமல்லி . கருவேப்பில்லை வாங்க பல்பொருள் வணிக அங்காடி செல்லாமல் இவர்களிடம் வாங்கலாமே....
இதை ஏற்கனவே பல பேர்கள் பலவிதமாக சொல்லிவிட்டார்கள் ... நான் எனக்கு தெரிந்த விதத்தில் சொல்கிறேன் அவ்வளவுதான்.... 

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் ,முட்டை , மளிகை பொருட்கள் போன்றவைகளையாவது அவர்களிடம் வாங்கலாமே!..... அதுவும்  சென்னை , பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வாழ மிகவும் சிரமப்படும் மக்களை ஓரளவிற்காவது முன்னேற்றும்... எதற்கெடுத்தாலும் வணிக வளாகங்களை நோக்கி ஓடும் இளைய சமுதாயம் தன் இன மக்களையும் ஒருகணம் சிந்தித்து இது போன்றவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற உத வேண்டும். 

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Part-II வேங்கையின் மைந்தன்- முதலாம் இராஜேந்திரன்

        இதற்கிடையில் தப்பியோடிய மகிந்தன் மகன் மற்றும் அமைச்சர் மெய்கீர்த்தி ஆகியோர் சோழர்களை பழிவாங்க துடிக்கின்றனர். மன்னன் ராஜேந்திரன் இலங்கை போரிலே பெரும்பான்மையாக கலந்து கொண்ட வீரர்களுக்கு பரிசாக புதிய தலைநகர் ஒன்றை அமைத்து அதற்கு சோழபுரம் என்ற பெயரை வைப்பதற்கான திட்டத்தை வகுக்கிறார். மேலும் அந்த நகரில்  தஞ்சை பெரிய கோவில் போல  மிகப்பெரிய ஒரு ஆலயத்தை நிர்மாணிக்கவும் சொல்கிறார்.
இன்னொருபுறம் மதுரையில் ஒரு கோட்டையை நிர்மாணிக்கவும் உத்தரவிடுகிறார் இதை அறிந்த பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சினம் கொண்டு இரகசியமாக படை திரட்டி போரிட துணிகிறான். இதற்கு உதவியாக இளங்கோவின் நண்பன் வீரமல்லனின் உதவியை சுந்தர பாண்டியன் அமைச்சர் உதவியுடன் பெறுகிறார். ஏற்கனவே இளங்கோவின் புகழின் மேல் பொறாமை கொண்ட வீரமல்லன், ரோகிணியின் அழகில் மயங்கி எப்படியாவது சோழர்படைகளை வெல்வதற்கு சுந்தர பாண்டியனுக்கு உதவியாக இருந்தால்  தானும் ஒரு சிறிய நாட்டிற்காவது  அரசனாகிவிடலாம் அப்புறம் ரோகினியை மணப்பது எளிது என்று எண்ணி அவர்களின் திட்டத்திற்கு  உதவுவதாக வாக்களிக்கிறான்.
வடக்கே சென்ற சோழர்படைகள் வாதாபியை  வெற்றி கொண்ட செய்தி அறிந்த ராஜேந்திரன், அப்படைகளை மேலும் முன்னோக்கி கங்கை வரை சென்று தீர்த்தம் கொண்டுவர உத்தரவிடுகிறார்.மேலும் வழியில் இருக்கும் நாட்டின் அரசர்கள் பணியாவிட்டால் அவர்களை வென்று முன்னேறும் படி சொல்கிறார்.ஆறுமாதகாலம் கழித்து சோழர்படைகள் கங்கை தீர்த்ததுடன் திரும்பி வருகின்றன இந்த வெற்றியின் நினைவாக தான் புதிதாக நிர்மாணித்திருக்கும் சோழபுரத்திற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயரை சூட்டுகிறார். சோழ நாடே கங்கை கொண்ட சோழபுரத்தில் திரண்டு வெற்றி விழா கொண்டாடுகிற  நேரத்தில் இளங்கோவின் கொடும்பாளூரை முற்றுகையிட்டு தீக்கிரையாகுகின்றன பாண்டியபடைகள், மேலும் அதே நேரத்தில் வெற்றி விழாவிற்குள் மாறுவேடத்தில் புகுந்து குழப்பத்தை விளைவித்து கைபற்றி விடவேண்டும் என்ற நோக்குடன் வருகின்றனர் பாண்டிய படைகள். இதனை ரோகிணியின் மூலன் அறியும் இளங்கோ பாண்டியர் படைகளை துரத்தி அடிப்பதுடன் மகிந்தன் மகன் காசிபனையும் கொலை செய்கிறான். இளங்கோவிடம் உயிர் பிச்சை பெரும் நண்பன் வீரமல்லன் மனம் திருந்தி இறக்கும் தருவாயில் இருக்கும் ரோகினியை காப்பற்றி இளங்கோவிடம் ஒப்படைக்கிறான்.
ராஜேந்திரன் மதுரையில் அமைக்கபட்ட புதிய கோட்டையில் தன் மகனுக்கு சுந்தர பாண்டியன் என்பெயரிட்டு பாண்டிய மணிமுடியை அவனுக்கு அணிவித்து பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். இளங்கோ தன்னை காதலித்த ராஜேந்திரன் மகள் குந்தவை மற்றும் ரோகினியை மணந்து கொள்கிறான்.
இதற்கிடையில் சிங்கள் அமைச்சர் மெய்கீர்த்தின் சதியால் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கும் சோழ வணிகர்கள்  ரோகன படைகளால்(இந்தோனேசியா)  தாக்கபடுகிறார்கள். அவர்களை காக்கவும் ரோகனத்தை கைபற்றவும் இளங்கோ படையுடன் புறப்பட்டு வெற்றி பெற்று திரும்புகிறான்.
முடிந்தது

புதன், 1 ஆகஸ்ட், 2012

வேங்கையின் மைந்தன்- முதலாம் இராஜேந்திரன்

வேங்கையின் மைந்தன் 
       முதலாம் இராஜேந்திரனுக்கு மிகவும் பொருத்தமான பெயர், அதையே தான் எழுதிய வரலாற்று நாவலுக்கு தலைப்பாக இட்டிருப்பது அந்த மன்னனுக்கு மேலும் புகழ் சேர்ப்பது போலாகும். ஆம் நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது 1960 களில் வெளிவந்து இந்திய அரசின் சாகித்ய அகடமி விருது பெற்ற முதாலாம் இராஜேந்திர சோழனின் வரல்லாறை கூறும் நாவல் வேங்கையின் மைந்தன். முதலாம் இராஜேந்திரனுக்கு வயது ஆகிவிட்டதால் அவரை கதையின் நாயகன் ஆக்காமல் கொடுமபாளூர் இளவரசனை(சோழர் படை தளபதி) கதையின் நாயகன் ஆக்கியுள்ளார். திரு.அகிலனின் எண்ணத்தில் உதித்து எழுத்தாக வெளிவந்தது. 

" தாய் 8 அடி  பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" போன்ற எத்தனை தமிழ் பழமொழிகள் உள்ளதோ அதை அத்தனையும் உதாரணமாக  முதலாம் இராஜேந்திரனுக்கு சொல்லலாம். ராஜராஜன் ஆட்சிக்கு வந்ததே நாற்பது வயதிற்கு மேல் தான் அதன் பிறகு  அவன் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருந்தாதால் அவனை  அடுத்து பதவிக்கு வரவேண்டிய அவன் மகன் முதலாம் இராஜேந்திரனும் ஆட்சி கட்டிலில் ஏற கிட்டதட்ட 5o  வயது ஆகிவிட்டது. ஆனாலும் தந்தையின் வழி நின்று இன்னும் சொல்லபோனால் அவரைவிட ஒருபடி மேலே சென்று ஆட்சியை திறம்பட செய்து பல நாடுகளை கைப்பற்றி புலிக்கொடியை பறக்க விட்டவர். அவரின் திறமைக்கு இன்றும் சான்றாக விளங்குவது கங்கை கொண்ட சோழபுரம். ஒருமுறை அதை நேரில் சென்று பாருங்கள் அதன் பிரமாண்டம் என்னெவென்று உங்களுக்கு புரியும். 
கதை சுருக்கம்:
சோழர்களின் கீழ் அரசாண்ட பாண்டியர்கள் சிங்கள மன்னன் மகிந்தனுடன் சேர்ந்து சோழர்களை போரில் வெல்ல துடிக்கின்றனர். மேலும் வடக்கே சாளுக்கிய மன்னனும் சோழர்கள் மீது படையெடுத்து வருகிறான். பாண்டியர்களை தூடிவிடும் சிங்களர்களுக்கு பாடம் புகட்டினால் பாண்டியர்கள் தானாக அடங்கி விடுவார்கள், மேலும் ராஜராஜன் இறக்கும் தருவாயில் தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும் சிங்களர்கள் மீது படை  எடுத்து சென்று காலங்காலமாக சிங்களவர்களின் பிடியில் இருக்கும்  மணிமுடியையும்  கொண்டுவந்து அதை தன்  மகனுக்கு முடிசூட்டி பாண்டிய நாட்டை அவனிடம் ஒப்புவிக்கவும் முடிவு செய்கிறார் . இதற்கு பொருத்தமானவன் தனது தாய் வழி சொந்தத்தில் வந்த கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ என்று முடிவு  செய்து அவனுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு வந்தியதேவனை(பொன்னியின் செல்வனில் வரும் அதே வந்தியத்தேவன் தான் ஆனால் கிட்டத்தட்ட ௭௦ வயது முதிர்ந்த கிழவனாக தோற்றமளிக்கிறார்)  அனுப்புகிறார்.

சிங்கள மன்னன் மகிந்தனோ அமைச்சர் மெய்கீர்த்தி பிடியில் இருக்கிறார், மேலும் அவன் வைத்தது  அங்கு சட்டமாக இருக்கிறது. இதற்கிடையில் சோழ படைகள் இலங்கையை வென்று மன்னன் மகிந்தன் அவன் மனைவி மற்றும் அவரது மகள் ரோகினி சிறைபடுத்தப்படுகிரார்கள். மகிந்தனின் மகன் காசிபன்  , அமைச்சர் ஆகியார் தப்பித்து சென்று சோழர்களை பழி வாங்க துடிக்கின்றனர்.இதற்கிடையில் மகிந்தனின் மகள் ரோகினி இளங்கோ மீது காதல் கொள்கிறாள். ரோகிணியின் உதவியுடன் பாண்டிய மணிமுடியை கண்டுபிடித்து மணிமுடி மற்றும் சிறைபடுதப்பட்ட மகிந்தன் குடும்பத்துடன் சோழர் படைகள் நாடு திரும்புகிறன. 
தொடரும் 

திங்கள், 23 ஜூலை, 2012

கல்கியின் பார்த்திபன் கனவு

ஒரு திரில்லர் படத்திற்கு இணையான  கதை ஓட்டம், படிக்க படிக்க அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்று சில  இடங்களில் பட படக்க வைக்கிறது. சிவகாமியின் சம்பதம் படித்தபின் இதை படித்தால் தான் கதையின் முழு சுவாரசியத்தையும் அனுபவிக்க முடியும். கதை என்னெவோ பல்ல மன்னன் நரசிம்ம சக்கரவர்த்தியை சுற்றி நகர்ந்தாலும். கதையின் நாயகர்கள் சோழ மன்னன் பார்த்திபனும் அவனது மகன் விக்கரமனும்தான். அந்த காலத்தில் தமிழகத்தில் நிலவிய  நரபலி கொடுப்பது மற்றும் தன்னையே நரபலியாக்கிகொள்வது போன்ற கொடிய பழக்கங்கள் பற்றி கல்கி அவர்கள் விவரித்திருக்கும் விதம் ரொம்பவும்  அருமை.நாவலின் இன்னமொரு அம்சம் என்னவென்றால் வரலாற்றில் மிகவும் பிரபலமான சீன பயணி யுவான் சுவாங் மாமல்லபுரத்திற்கு வருகை தந்த நிகழ்வு இதில் பதியப்பட்டுள்ளது.மேலும் சாதரணமான ஓடக்காரன் பொன்னன் மற்றும் அவன் மனைவி வள்ளி இவர்கள் இருவரும் கதை முழுக்க விக்கிரமனுக்கு உதவும் காதாபாதிரங்களாக வருவார்கள்.

கதை சுருக்கம்:
  பல்லவ அரசின் கீழ் இருக்கும் சோழ மன்னன் பார்த்திப சோழன் ஆறு ஆண்டுகளாக கப்பம் கட்ட மறுத்து நரசிம்ம பல்லவரை போருக்கு அழைக்கிறான், ஆனால் போரில் தோற்று போகிறான். இறக்கும் தருவாயில் சிவனடியார் ஒருவரிடம் தன மகனை ஒரு சிறிய சுகந்திர நாட்டிற்காவது அரசனாக்கி , அதன் பிறகு சோழர்களின் பரம்பரை மணிமகுடத்தை ஒப்புவிக்குமாறு கூறி சத்தியம்  வாங்கிகொண்டு இறக்கிறார். சில வருடங்கள் கழித்து ஓடக்காரன் பொன்னன் உதவியுடன் பல்லவ கொடியை இறக்கி சோழர் கோடியை ஏற்றும் முயற்சியில், அவன் சித்தப்பா மாரப்ப பூபதியின் சூழ்ச்சியால்  நரசிம்ம பல்லவரால்  நாடுகடத்தப்படுகிறான் விக்கிரமன். இதற்கிடையில் நரசிம்ம பல்லவர் நரபலி கொடுக்கும் கூட்டத்தை கண்டுபிடித்து அதை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மேலும் விக்கிரமனின் தாய் அருள் மொழி தேவியை நரபலி கொடுக்கும் கபாலிகர்கள் கடத்தி செல்கின்றனர். நரசிம்ம பல்லவரின் புதல்வி குந்தவி விக்கிரமன் மீது  காதல் கொண்டு அவனை கானத்துடிக்கிறாள். நரசிம்ம பல்லவரின் முயற்சி வென்றதா? குந்தவி காதலனை கைப்பிடித்தாளா? விக்கிரமன் பார்த்திபன் கனவை மெய்ப்பித்தான? விகிரன்மன் தாய்  மீட்கப்பட்டாளா?  போன்ற கேள்விகளுக்கு விடையுடன்  கதை முடிக்கபட்டிருக்கும்.
பார்த்திபன் கனவு தான் கல்கி எழுதிய சரித்திர நாவல்களில் மிகச்சிறியது.இது சிவகாமியின் சபதத்தின் இரண்டாம் பாகம் என்றே கூறலாம்.அந்த அளவிற்கு சிவகாமியின் சபதத்தின் வரும் கதாபாத்திரங்கள் சற்றே வயது முதிர்ந்த வேடத்தில்  பார்த்திபன் கனவில்  வருகின்றனர்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

ரயில் தட்கல் இருக்கை முன்பதிவு நேரம் மாற்றம்



  நான் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வதனால் அது பற்றி வரும் செய்திகளை தேடித் தேடி படிப்பேன் அவ்வாறு படித்தவைகளில் முக்கியனான சிலவற்றை மற்றவர்களுக்கும் இந்த பதிவின் மூலமாக தெரிவிப்பதில் நமக்கு ஒரு திருப்தி. அந்த வகையில் இன்று தட்கல்  இருக்கை முன்பதிவு நேரம் பற்றிய அறிவிப்பை பார்ப்போம்.

  தட்கல் முன்பதிவு  காலை 8 மணியில்  இருந்து காலை 10  மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வருகின்ற ஜூலை ௰ம் தேதி முதல் நடை முறைக்கு வருகிறது. இதன் மூலம் செற்வர் லோடை கொஞ்சம் குறைக்கலாம். ஆமாம் சாதாரண இருக்கை முன்பதிவும் காலை 8   மணிக்கு  அதே நேரத்தில் தட்கல் இருக்கை முபதிவும் அதே நேரத்தில் இருப்பதால் செற்வர் லோட் அதிகமாகி என்னதான் விரைவு இனைய இணைப்பு இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இருக்கை முன்பதிவு செய்ய முடியாமல் போய்விடுகிறது.  இப்போது தட்கல் முன்பதிவை  10  மணிக்கு  மாற்றியதன் மூலம் சர்வர் லோட் ஐ கொஞ்சம் குறைக்கலாம்.

மேலும் 10 மணி முதல் 12 மணி வரை  authorized  dealers  யாரும் தட்கல் இருக்கை முன்பதிவு செய்ய முடியாது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது, இது மேலும் மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும். பெரும்பாலான இருக்கைகளை இவர்களே முன்பதிவு செய்து கொண்டு கொள்ளை விலைக்கு விற்பார்கள். இனிமேல் அது முடியாது.
மொத்தத்தில் பயணிகளுக்கு நல்லது நடந்தால் சரிதான் 

திங்கள், 2 ஜூலை, 2012

தொடங்கியது நாகூர் - பெங்களூர் பயணிகள் ரயில் சேவை




பெங்களூர் - கடலூர் - நாகூர் பயணிகள் ரயில் சேவை ஜூலை 1 தேதி முதல் தொடக்கம் என்று முன்பே சாரலில் குறிப்பிட்டிருந்தோம், அதன் படி பெங்களூரில் இருந்து காலை 7 .15  புறப்பட்ட ரயில் சேலம் , விருத்தாசலம் , வடலூர் (4 .47 ), கடலூர் , சிதம்பரம் , மயிலாடுதுறை வழியாக நாகூரை இரவு 10 .40 க்கு  சென்றடைந்தது.


மறுமார்கத்தில் அதிகாலை 4  மணிக்கு ஜூலை 2  ம் தேதி புறப்பட்ட ரயில் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் , கடலூர் துறைமுகம், குறிஞ்சிப்பாடி , வடலூர்(8 .45 ) , விருத்தாசலம் , சின்ன சேலம் , ஆத்தூர் , சேலம் , ராயக் கோட்டை , ஓசூர் வழியாக இரவு 7  மணிக்கு  பெங்களூர் வந்தடையும்.

வியாழன், 28 ஜூன், 2012

சிவகாமியின் சபதம் - புத்தக விமர்சனம்

சிறுவதில் கல்கியில் தொடராக வந்த பொன்னியின் செல்வன் நாவலை எப்போதாவது ஓரிரு பகுதியை படித்ததுண்டு அப்போதெல்லாம் அதன் மீது அந்த அளவிற்கு ஈர்ப்பு இல்லை. பலர் பொன்னியின் செல்வன் நாவலை பற்றி சொல்ல சொல்ல அப்படி என்னதான் இதில் இருக்கிறது பார்ப்போமே, என்று முடிவு செய்து புத்தகத்தை வாங்கலாம் என்று சென்று பார்த்தால் ஐந்து பாகங்கள் ஒவ்வொரு பாகமும் ஒரு புத்தகம். இது வேலைக்கு ஆவாது ... அப்படின்னு நெனைச்சி .... முதல்ல கல்கி எழுதிய பார்த்திபன் கனவு படிப்போம் பிடிசிருந்ததுன்னா பொன்னியின் செல்வன் படிக்கலாம் அப்படின்னு, பார்த்திபன் கனவு படித்தேன். விளைவு புத்தகம் ரொம்ப பிடிச்சி போயி உடனே பொன்னியின் செல்வன்  வாங்கி படித்து முடித்தேன். இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணாமாக சிவகாமியின் சபதம் படித்து முடித்தேன். பார்த்திபன் கனவு நாவலிலே சிவகாமியின் சபதத்தை படித்த பிறகு இந்த நாவலை படித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.இந்த நூலுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை அதனால் எனக்கு தெரிந்த கதை சுக்கத்தை மட்டும் கூறுகிறேன்.

கதை சுருக்கம்:
வாதாபி(இன்றைய கர்நாடகா பகுதி)  மன்னன் புலிகேசி , பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் காஞ்சி கோட்டையை கைப்பற்றி பல்லவ சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படையெடுத்து வருகிறான். இதனை சற்றும் எதிர்பார்க்காத மகேந்திர பல்லவன் ஒரு சிறுபடையுடன் கிளம்பி புலிகேசியை வழியிலே இடைமறித்து வைக்கிறான். இதற்கிடையில் புலிகேசியின் அண்ணன் நாகநந்தி என்பவன் ஒற்றனாக காஞ்சி நகரில் இருந்து கொண்டு உளவு பார்த்து புலிகேசி படை தாக்குவதற்கான சரியான நேரத்தை ஓலையில் குறித்து அதை  பரஞ்சோதி(கல்வி கற்பதற்காக காஞ்சி வந்தவன்)  மூலமாக  புலிகேசியிடம் ஒப்புவிக்க அவன் அறியாமலே அவனிடம் அஜந்தா இரகசியத்தை அறிவதற்கு உரிய ஓலை இது என சொல்லி அனுப்புகிறான். நாகநந்தியின் சூழ்ச்சியை  போலவே பரஞ்சோதி புலிகேசியிடம் அகப்பட்டு கொள்கிறான் ஆனால் அதற்கு முன்னரே மாறு வேடத்தில் வரும் மகேந்திர பல்லவன் நாகநந்தியின் ஓலையை மாற்றி வைத்து விடுகிறார். மேலும் மொழி புரியாமல் புலிகேசியிடம் மாட்டிக் கொண்ட பரஞ்சோதியை மீட்டு பல்லவ படை முகாமுக்கு அழைத்து சென்று அவரை பல்லவ படையின் தளபதியாக்கி விடுகிறார். அதன் பிறகு  எட்டு மாதங்கள் புலிகேசியின் படையை முன்னேற விடாமல் தடுத்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் மகேந்திர பல்லவனின் மகன் மாமல்லனை காஞ்சி கோட்டையிலே பாதுகாப்புக்காக விட்டு விட்டு செல்கிறார். மேலும் நாட்டியகலையில் சிறந்து விளங்கும் சிவகாமி என்னும் ஆயனரின் மகளும் பல்லவ மன்னனின் மகனும் காதல் கொள்கின்றனர். நாகநந்தியும் சிவகாமியின் மேல் ஒருதலையாக காதல் கொள்கிறான், புலிகேசி எப்படியாவது பல்லவ நாட்டை வென்று இந்த சிவகாமியை எனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி ஒற்றனாக வேலைபார்க்கிறான். மகேந்திர பல்லவனுக்கும் மாமல்லன் சிவகாமியை மணந்துகொள்ளவதில் விருப்பம் இல்லை.

மறுபுறம் வேங்கி நாட்டில் இருந்து படை எடுத்து வரும் துர்வீந்திரனை அடக்க மாமல்லனை படையுடன் புறப்பட்டு போகும் படி மகேந்திர பல்லவன் ஆணை இடுகிறார். துணைக்கு தளபதி பரஞ்சோதியை அனுப்பி வைக்கிறார். அவர்கள் துர்வீந்திரனை வென்று திரும்புகின்றனர். அதன்பிறகு மகேந்திர பல்லவனின் ஆணைப்படி காஞ்சி கோட்டையை பலப்படுத்துகின்றனர். புலிகேசி கோட்டை முற்றுகைக்கு முன்னேற பல்லவ படை காஞ்சி கோட்டையை வந்தடைகிறந்து. புலிகேசி படையோ  காஞ்சி கோட்டையை எவ்வளவோ முயற்சி செய்தும் கைபற்ற முடியாமல் சமாதான  தூது அனுப்புகின்றனர். அதனை ஏற்ற பல்ல மண்ணின் கோட்டையில் சில நாட்கள் விருந்தினராய் தங்கி விட்டு புலிகேசி புறப்படுகின்றான். இதற்கிடையில் நாகநந்தி பல்லவ படையால் காது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுகிறார். அவரை விடுதலை செய்ய செய்ய மகேந்திரன் மறுப்பதனால். புலிகேசி போகும் வழியில் தென்பட்ட எல்லாவற்றையும் அழித்து விட்டு பல பல்லவ பெண்களையும் , ஆணைகளையும் கைது செய்து கொண்டு செல்கிறான். நாகநந்தியோ நய வஞ்சகமாக ஆயனரை ஏமாற்றி சிவகாமியை வாதாபிக்கு அழைத்து செல்கிறான். 
மாறுவேடத்தில் வாதாபிக்கு செல்லும் மாமல்லனிடம் சிவகாமி  "இந்த புலிகேசியை வென்று வாதாபியியை எரித்து விட்டு அதன் பிறகு  என்னை அழைத்து செல்லுங்கள் என்று சபதம் செய்கிறாள்".அதன் பிறகு மகேந்திர பல்லவர் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் மாமல்லனை வற்புறுத்தி பாண்டிய மன்னனின் மகளை மனம்முடித்து வைத்துவிட்டு வாதாபியை வென்று சிவகாமியை மீட்டு வரவேண்டும் என்று சொல்லி இறக்கிறார். ஒன்பது வருடங்களாக படையை  திரட்டி பாண்டிய படையின்  உதவியுடன் வாதாபியை அழித்து புலிகேசியை கொன்று சிவகாமியை மீட்டு வருகிறான்  மாமல்லன். ஆனால் கள்ள புத்த துறவியான நாகநந்தி சிவகாமியை கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்து தளபதி பரஞ்சோதியிடம் உயிர் பிச்சை வாங்கி தப்புகிறார்.

சிவகாமியோ மாமல்லன் திருமணமான செய்தி கேட்டு பெரும் துயருற்று சிவபெருமானையே மணந்து நாட்டிய கலையில் கவனத்தை செலுத்துகிறாள். தளபதி பரஞ்சோதியோ தளபதவியை துறந்து சிவா பக்தராகி சிவத் தொண்டு புரிகிறார். இவரே பின்னாளில் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுகிறார் 

வெள்ளி, 22 ஜூன், 2012

தளபதி


இது சிவகாமியின் சபதத்தில் வரும் தளபதி பரஞ்சோதி ... நீங்க இளைய தளபதியையோ அல்லது திமுக தளபதியையோ  நினைத்து வந்திருப்பீர்கள் என்று தெரியும் ... வந்ததுதான் வந்துட்டீங்க அப்படி ஒரு எட்டு என்னன்னு படிச்சிட்டு  போங்க பாவம் .. அவங்க நம்ம வரலாற்றை பெருமையாக்க    எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருப்பாங்க ........

முரட்டு சுபாவம் கொண்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் பலரிடம் சண்டையிட்டு  கொண்டிருந்த தன் மகனை கல்வி கற்பதற்காக தலைநகர் காஞ்சி அனுப்புகிறார் ஒரு தாய். பிற்காலத்தில் அவனே பல்லவர்களின் தளபதி  பதவியை அடைந்து வீரப்போர் புரிந்து பல்லவ அரசை காப்பாற்ற போகிறான் என்பது அப்போது அவருக்கோ அல்லது நாவலை படிக்கும் வாசகர்களுக்கோ தெரியாது. மிகவும் எளிமையாக ஆரம்பிக்கும் பரஞ்சோதியின் வாழ்வில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனின் நம்பிக்கைக்கு உரியவனாகி தளபதி பதவி அடைவது வரை நடைபெறும் சம்பங்கள் மிகவும் எதிர்பாராதவைகளாகும்.

முதலில் பரஞ்சோதியின் வீரம் வெளிப்படும் விதமாக நாவலின் ஆரம்பத்தில் கதையின் நாயகி சிவகாமியும் அவரது தந்தை ஆயனரும் பல்லக்கில் செல்லும் பொது மதம் கொண்ட யானை ஒன்று அவர்களை தாக்க வர சற்றும் எதிர்பாரா விதமாக கையில் இருந்த வேலை அதன் மீது எறிந்த உடன் அது வலியால் எதிர் திசை நோக்கி ஓட பல்லக்கில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் பல்லவ மண்ணுக்கு ஒரு யோசனை தோன்றியதாம். அதாவது கிட்டத்தட்ட பதினாறாயிரம் யானைகளை அடங்கிய  யானைப்படையை கொண்ட வாதாபி மன்னன் புலிகேசியின் படைகள் தலைநகர் கஞ்சியை முற்றுகையிட தயாராக இருக்கிறது, அதை முறியடிக்க பல்லவ மன்னனிடம் படைபலம் இல்லை, இதை எவ்வாறு முறியடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கையில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் மூலம் புலிகேசியின் சாராயம் கொடுக்கப்பெற்று மதம் கொள்ள செய்யப்பெற்ற யானைகள்  கோட்டையை தாக்க  வரும் போது, அவற்றின் மீது வேலை எறிந்தால் அவைகள் திரும்பி ஓடி அவர்களின் படைகளையே நாசமாக்கும் என்பதை பல்ல மன்னன் யூகித்துக் கொண்டார். மேலும் சமயோசிதமாக மற்றும்  பயம் இல்லாமல் யானையின் மீது  வேலை எறிந்த  பரஞ்சோதியின் வீரமும் அவருக்கு பிடித்து விட்டது.அவரை சந்தித்து தன்னுடைய தளபதியாக்கி கொள்ள பல்லவ மன்னன் முயலுகையில் புலிகேசியின் அந்தரங்க ஒற்றன் நாகநந்தி அடிகள் என்னும் புத்த பிக்குவின் சூழ்ச்சியில் சிக்கி கொண்டு, அவன் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு புலிகேசியின் படையிடமே சிக்கி கொள்கிறார் பரஞ்சோதி. மொழி பிரச்சினையால் அவர்கள் விசாரணையிலும் எதுவும் சொல்ல முடியாமல்  தவிக்கிறார். அப்போது அங்கு மாறுவேடத்தில் வரும் பல்லவ மன்னன் பரஞ்சோதியை மீட்டு அவரி தப்புவித்து கொண்டு பல்ல படை முகாமுக்கு கொண்டு செல்கிறார் அவர் மன்னர் என்று தெரிவிக்காமலே. அதன் பிறகு எட்டு மாதங்கள் பல்லர் படை முகாமில் தங்கி வாதாபி படைகளை நகரவிடாமல் வீரப்போர் புரிந்து கொண்டிருக்கிறார் பரஞ்சோதி.

இதற்கிடையில் மற்றொரு பக்கத்தில் இருந்து கங்க மன்னன் காஞ்சியை முற்றுகையிட வந்து கொண்டு இருக்கிறான் என்ற செய்தி எட்ட, மன்னர் பரஞ்சோதியை இளவரசர் மாமல்லனின் துணைக்கு அனுப்பி வைக்கிறார். தந்தை தன்னை போர்களத்திற்கு வரவேண்டாம், கோட்டையிலே இருக்க வேணும் என்று கூறியதிலிருந்து மிகவும் துயரத்துடன் இருக்கும் மாமல்லனோ மிகவும் உற்சாகமாக படைகளை திரட்டி கொண்டு கங்க மன்னனுடன் மிகச்சிறய படையுடன்  போர் புரிய கிளம்புகின்றனர். வீரப்போர் புரிந்து கங்க மன்னனை ஓட ஓட விரட்டியடிகின்றனர்.

இது வரையில் நான் படித்தது அவ்வளவுதான்... இன்னும் பாதிக்கு மேல் படிக்க வேண்டி இருக்கிறது.... வாதாபி படைகள் காஞ்சியை முற்றுகை இட்டனவா? அல்லது பல்லவ மன்னன் அதை முறியடித்தானா   என்பது படிக்க படிக்க தான் தெரியும்.  அதில்  தளபதியாரின் பங்கு என்ன என்பது பற்றி பிறகு வரும் பதிவில் கூறுகிறேன்





திங்கள், 18 ஜூன், 2012

சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வன் ஓர் ஒப்பீடு


எப்படியோ ஒருவழியாக கடந்த 10  மாதங்களாக  பொன்னியின் செல்வன் நாவலை  படித்து முடித்து விட்டேன். அதனால் ஏற்பட்ட ஒரு ஆர்வம் கல்கியின் மற்றுமொரு சரித்திர நாவலான சிவகாமியின் சபதம் நாவலை படிக்க தூண்டியது விளைவு பெங்களூரில் இருந்தாலும் உடுமலை.காம் இணையதளத்தில் முன்பதிவு  செய்து VPP  மூலம் புத்தகத்தை பெற்று படிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.சும்மா சொல்லகூடாது உடுமலை.காம் புத்தகத்தை சொன்னபடியே அனுப்பி விட்டார்கள் ... எனக்குதான் அந்த அளவிற்கு நம்பிக்கை இல்லை ... அதற்காக உடுமலை.காம் இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். சரி இப்ப என்ன சொல்ல வரன்றிங்களா இதோ சொல்லிடறேன்...

பொன்னியின் செல்வன் நாவலைப்போல சிவகாமியின் சபதமும் உண்மையான  சரித்திர சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதில் சில கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து புனையபட்ட நாவலாகும். ஆனால் அதன் சரித்திர நிகழ்வுகளை கொஞ்சமும் மிகைப்படுத்தியோ அல்லது கற்பனையான சம்பவங்களை சேர்த்தோ எழுதவில்லை என்று திரு.கல்கி அவர்களே கூறுகிறார்கள். பொன்னியின் செல்வன் சோழர்களின் பொற்காலங்களில் ஒன்றான இராஜராஜனின் வாழ்க்கை சம்பங்களை அடிப்படையாக கொண்டது. சிவகாமியின் சபதமோ பல்லவர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத புகழுடன் விளங்கிய மன்னனான மகேந்திர பல்லவன் மற்றும் அவனுடைய மகன் மாமல்லன் என்கின்ற நரசிம்ம வர்மன் ஆகியவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படியாக  கொண்டது.


இராஜராஜனின் காலத்தில் பல்லவர்கள் சோழர்களின் ஆளுமைக்குட்பட்டு  அவர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக வாழ்ந்து வந்தனர். மகேந்திர பல்லவன் காலத்தில் சோழர்கள் குறுநில மன்னர்களாகி அவர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வந்தனர். இருவரது காலத்திலும் காலத்தால் அழியாத கோவில்களையும் சிற்பங்களையும் உருவாகினார்கள். மகேந்திர வர்மன் மாமல்லபுரம்  சிற்பங்கள் மற்றும் கோவில்களையும், இராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலையும் எழுப்பினார்கள்.


பொன்னியின் செல்வன்  நாவலின் வில்லியான  நந்தினியை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்  சிவகாமியின் சபதமோ சிவகாமியை சுற்றி நகரும். இரண்டு  நாவல்களின் காலத்திலும் புத்தமதம் பிரதானமாக  இருந்து பிறகு சைவ மதம் தழைக்க ஆரம்பித்த தருணம்
இந்த இரு சரித்திர நாவல்களுக்கும் உள்ள ஒரு வேற்றுமை என்னவெனில் பொன்னியின் செல்வனோ ஆட்சியை  பிடிக்க   உள் நாட்டில் ஏற்படும் கலகத்தை  முறியடிக்கும் விதமாக இருக்கும் மாறாக சிவகாமியின் சபதம் எதிரி நாட்டின் படையெடுப்பில் கவர்ந்து சென்ற பெண்ணை திரும்பவும் கொண்டுவரும் விதமாக முடிக்கப்பட்டிருக்கும்.பொன்னியின்  செல்வனோ அல்லது சிவகாமின் சபதமோ படிக்கும் பொது விறுவிறுப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லை, படிக்க படிக்க ஆவலை  தூண்டும் நாவல்களாகும்.

சிவகாமின் சபதம் பற்றி மேலும் சில பதிகளை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் போகப்போக மேலும் சில பதிவுகள் இது தொடர்பாக வெளிவரும்.








வியாழன், 14 ஜூன், 2012

யார் உங்களில் அடுத்த ஜனாதிபதி?

          அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுபதற்கான போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.  தேர்தலுக்கான தேதி வேறு அறிவிக்கப்பட்டுவிட்டது. கிட்டதட்ட அனைத்து பெரிய கட்சிகளும் ஒவ்வொரு வேட்பாளர் பெயரினை அறிவிக்க கதிகலங்கி போயுள்ளது காங்கிரஸ் கூடாரம்.மத்தியில் ஆட்சியில் இருந்தும் தங்களால் வழிமொழிந்த ஒருவரை ஜனாதிபதியாக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அது உள்ளது.இதன் காரணமா பெரும்பான்மை பலம் இல்லாததால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு தொல்லை கொடுக்கும் அதன் கூட்டணி கட்சியான திர்னாமுள் காங்கிரஸ் கட்சி தலைவி இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சீண்ட ஆரம்பித்துள்ளார். சோனியா காந்தியோ அவரின் தீவிர  விசுவாசிகளில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப்பை ஜனாதிபதியாக்கி விடலாம் என்று கனவு காண அதை உடைக்கும் வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளார் மம்தா. அப்படி என்ன தீராத பகையோ திரு.பிரணாப் மீது?.

         மமதா அவர்கள் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்குடன் சேர்ந்து மூன்று பேர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளது. அவர்கள் முறையே திரு.மன்மோகன் சிங் , அப்துல் கலாம் மற்றும் சோம்நாத் சட்டர்ஜி. இதில் அப்துல் கலாம் பெயரை ஒருபோதும் காங்கிரஸ் தலைவி ஏற்றுகொள்ள மாட்டார், அடுத்தது திரு.மன்மோகன் சிங் அவர் பெயரும் நிராகரிக்கப்பட்டது  ஏனென்றால் அது அடுத்த பதவி பிரச்சினையை ஏற்படுத்த கூடும்.மேலும் இருப்பது சோம்நாத் சட்டர்ஜி அவரையும் திரு.சோனியா அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

       நிலைமை இப்படி இருக்க ஊருக்கு முன்பே நவீன் பட நாயக்குடன் சேர்ந்து சங்கமா பெயரை அறிவித்துவிட்டார் அதிரடி ஜெயலலிதா. சங்கமாவும் தன பழங்குடியின பின்புலத்தை வைத்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் ஆதரை கோரிவருகிறார். பாஜகவோ உள்கட்சி பூசலை தீர்க்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருப்பதால் இந்த விசயத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. காங்கிரசின் வியுகம் வெற்றி பெறுமா, ஜெயலலிதாவின் கூட்டணி கரை தேறுமா, பாஜாக தான் கரை சேருமா இல்லை மமதா முலாயம் சிங் கூட்டணி கனவு பலிக்குமா. என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.

புதன், 13 ஜூன், 2012

கொடுமணல் - தமிழனின் வரலாற்று புதையல் (பாகம் 1 )




புதுச்சேரி பல்கலை கழகத்தின் வரலாற்று பேராசிரியர்  திரு.ராஜன் , 6  பிஎச்டி மாணவர்கள் , நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பல உள்ளூர் மக்களின் உதவியுடன் கடந்த இரண்டு மாத காலமாக ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ள கொடுமணல் என்னும் கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்கு கண்டுபிடித்த பல பொருட்கள் தமிழனின் வரலாற்று பெருமைக்கு மேலும் பெருமைசேர்க்கும் ஒரு மணிமகுடமாக இருக்கும். இவை அனைத்து சுமார் 2500  ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  அதிலும் அவர்கள் கண்டறிந்தது நூற்றில் ஓரு பங்குதான் என்று திரு.ராஜன் அவர்களே கூறுகிறார் மேலும் அந்த படுக்கையை மொத்தமாக அகழ்வு செய்ய குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு  மேலாகும் என்று கூறுகிறார்.


                                                       Courtesy : The Hindu
கொடுமணலில் காணப்படும் தொழிற்சாலை போன்று இந்து வரை இந்தியாவில் எந்த அகழ்வாரய்ச்சியிலும் கண்டறியப்படவில்லை என்ற செய்தி தமிழன் தான் உலகிற்கே முன்னோடியாக பல துறைகளில் சிறந்து விளங்கினான் என்பது தெளிவாகிறது.இந்த தொழிற்ச்சாலையில் இரும்பு , துணி வகைகள் மற்றும் சங்கு வளையல்கள் போன்றவைகளை உற்பத்தி செய்துள்ளனர்.


தொழிற்சாலை
இரும்புதாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுக்கும் ஒரு தொழிற்சாலை போன்றதொரு அமைப்பை திரு.ராஜன் அவர்களின் குழு  கொடுமணலில்  கண்டுபிடித்துள்ளது.  இதை உறுதிபடுத்தும் விதமாக இதற்கு முன்னர் சென்னிமலை அருகே இருபுத்தாது படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.சென்னிமலையில் எடுக்கப்பட்ட இரும்புத்தாதுக்களை கொடுமணலில் பிரித்தெடுத்து அதை  பல தேசங்களுக்கும் ஏற்றுமதி செய்துள்ளனர்.மேலும் குதுப்மினாரில் உள்ள துருப்பிடிக்காத பழங்கால தூண் இங்கு தயாரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகின்றது. இதை உறுதி செய்யும் விதமாக இங்கு பல வட இந்திய எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.இதிலிருந்து இந்த இடம் தொழிற்சாலையாக மட்டும் இல்லாமல் அந்த பொருட்களை வெளி இடங்களுக்கு வர்த்தகம் செய்யும் இடமாகவும் இருந்திருக்கிறது.

இதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட  பழங்கால  உடைந்த பானையின்  ஓடுகள் கிடைத்துள்ளது. அதில் "சம்பன் சுமணன்" என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன். இதிலிருந்து இந்த தொழிற்ச்சாலையின் உரிமையாளராக அவர்கள் இருக்ககூடும் என்று தெரிகிறது. இந்த பிராமி எழுத்துக்களானது சங்க கால இடங்களான பூம்புகார் , கொற்கை போன்ற இண்டங்களில் கிடைக்கப்பெற்ற எழுத்துக்களை விட அதிகம் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறும் தகவல்கள் வியக்கும் வண்ணம் உள்ளது. இங்கிருந்து ரோம் போன்ற நாடுகளுக்கு இரும்பை ஏறுமதி செய்துள்ளனர் என்கிறார்கள் அவர்கள்,

( தொடரும்)

திங்கள், 11 ஜூன், 2012

பொன்னியின் செல்வன் - கதாபாத்திரங்கள் அவற்றின் உறவு முறைகள்

பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படித்துக் கொண்டிருப்பவர்களுக்ககவும், படிக்க இருப்பவர்களுக்கும் உதவிகரமாக  அதில் வரும் கதாபாத்திரங்கள் மாறும் அவற்றின் உறவு முறைகள் பற்றியது இந்த பதிவு.

வல்லவரையன் வந்திய தேவன்  -  வாணர்குல வீரன்  ஆதித்த கரிகாலனின் நண்பன், குந்தவையின் காதலன்  மற்றும் கதையின் நாயகன்

 பராந்தக சோழன்  பிள்ளைகள்   அரிஞ்சய சோழன்   மற்றும்  கண்டராதித்தர்.   அரிஞ்சய சோழன்   புதல்வன் சுந்தர சோழன் இவருக்கு மூன்று பிள்ளைகள் குந்தவை , ஆதித்த கரிகாலன் , அருள்மொழி வர்மன். இந்த அருள்மொழி வர்மன் தான் பிற்காலத்தில் இராஜ இராஜ சோழன் எனும் பெயரால் அழைக்கப்பட்டான் .


  1.  அரிஞ்சய சோழன்     
    1. சுந்தர சோழன்  - மலையமான் மகள்  
      1. குந்தவை - கதையின் நாயகி 
      2. ஆதித்த கரிகாலன்               
      3. அருள்மொழி வர்மன்-இராஜ இராஜ சோழன்
  2.  கண்டராதித்தர்  - செம்பியன் மாதேவி
    1. மதுராந்தகன் - சிறிய பழுவேட்டரையர் மகள்



வானதி - அருள்மொழி வர்மனின் மனைவி
சேந்தன் - பூங்குழலி
பெரிய பழுவேட்டரையர் - நந்தினி -  கோட்டை நிர்வாகம் மற்றும் கருவூல நிர்வாகம்
சிறிய பழுவேட்டரையர்  (கலாந்தண்டகர் )  - கோட்டை நிர்வாகம் மற்றும் கருவூல நிர்வாகம்
அநிருத்தர் - முதன் மந்திரி
ஆழ்வார்கடியான் - அநிருந்தரின் முதன்மை ஒற்றன்
கந்தமாறன் - சம்புவரையர் குல இளவரசன்  மற்றும் ஆதித்த கரிகாலனின் நண்பன்
மணிமேகலை - கந்தமாறன் தங்கை
பார்த்திபேந்திர பல்லவன் - ஆதித்த கரிகாலனின் நண்பன்
விக்ரம பூபதி - சேனாதிபதி
ரவிதாசன்  - பாண்டிய மன்னனின்  ஆபத்துதவி
காளமுகன் - பாண்டிய மன்னனின் ஆபத்துதவி
பினாபகாணி - வைத்தியர் மகன்
தியாகவிடங்கர்  - பூங்குழலியின் தந்தை










வியாழன், 7 ஜூன், 2012

இன்னும் 5 ஆண்டுகளில் facebook மறையப்போகிறதா?

இன்று இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் தெரிந்த மற்றும் பயன்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருப்பது facebook  எனப்படும் சமூக வலைத்தளம் ஆகும். இன்னும் 5 முதல் 8 ஆண்டுகளுக்குள் இந்த facebook  அழிந்துவிடும் அல்லது புறக்கணிக்கப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் முடியவில்லை ஆனால் அதை உண்மை என்று நம்பவைக்க கூடிய அளவிற்கு பல கருத்துக்களையும், உதாரணங்களையும் முன்வைக்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுவது தொண்ணூறுகளின் இணையதள உலகில் கோலோச்சிய யாஹூ நிறுவனத்தைத்தான். அந்த காலகட்டத்தில் யாஹூ  சேவையை பயன்படுத்தாத இனையதள பயனரே இல்லை எனலாம் அந்த அளவிற்கு யாஹூ பிரபலம். நாளடைவில் யாஹூ தனது முக்கியத்துவத்தை இழந்தது. இதற்கு  முக்கிய காரணம்  கூகிள் வரவு அதை தொடர்ந்து கூகிளின் சமூக வலைத்தளமான ஓர்குட் இன் எழுச்சி.  தற்போது யாஹூ நிறுவனத்தின் நிகர லாபம், 2000  ஆண்டில் கிடைத்த வருமானத்தின் 10  இல் ஒரு பங்கு மட்டுமே.

அடுத்த தலைமுறை இணையதள சேவை கணினியை விட gadgets  எனப்படும் செல்போன் , டேபிலேட் போன்றவற்றின் மூலமே உபயோகிக்க படும். தற்போது  50 சதவிகிதம் பேர்கள் மட்டுமே  gadgets மூலம் facebook  கை பயன்படுத்துகிறார்கள் இந்த நிலைமை நீடித்தால் facebook  மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிடும் என அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிபுணர் எரிக் ஜாக்சன் கூறுகிறார்.

எது எப்படியோ ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புதிய சமூக வலைத்தளம் தோன்றி மறைவது வாடிக்கை என்றாகி விடும் போலிருக்கிறது.

புதன், 6 ஜூன், 2012

இன்று முதல் IVP4 to IVP6 ( Internet Protocol Version )

இன்று முதல் பெரும்பாலான இணையதள  சேவை அளிக்கும் நிறுவனங்கள்(google , Facebook)  IVP4 லிருந்து IVP6 க்கு மாறுகின்றன.  IVP4 என்பது இணைய  இணைப்பில் உள்ள கணினிகளுக்கு முகவரி(IP Address )  கொடுக்கும் Internet portocol  என்பதன் பதிப்பு(Version )  ஆகும். இது 32 bit  அளவுள்ளது, எனவே இதைபயன்படுத்தி சுமார் 232 அதாவத 4 294 967 296 கணினிகளுக்கு முகவரி அளிக்க முடியும். ஆனால் இன்று 
இணையத்தில் உள்ளகணினிகளின் எண்ணிக்கை இதை விட பன்மடங்கு பெருகிவிட்டதால் 
கணினிகளுக்கு முகவரி(IP Address) கொடுப்பதில் பல  சிக்கல்கள் எழுந்தது.இதை தவிர்க்கும் பொருட்டு உருவாக்கபட்டதுதான் IVP6 இது பல ஆண்டுகளக்கு முன்னரே வடிவமைக்கபட்டுவிட்டாலும் இதை பயன் பாட்டுக்கு கொண்டுவருவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தது.குறிப்பாக இணையதள சேவை அளிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த சேவைக்கு மாறுவதற்கு தயக்கம் காட்டின, ஏனென்றால் அவைகள் தங்கள் கணிப்பொறியில் பல மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. தற்போது பல பெரிய நிறுவனங்கள் தேவையான் மாற்றத்தை செய்து IVP6 கு மாறுவதற்கு தயாராகிவிட்டன.

இந்த IVP6 இன் சிறப்பு என்னவென்றால் இதன் மூலம் சுமார்  2128   கணினிகளுக்கு முகவரி கொடுக்க முடியும். இதில் உள்ள ஒரு சிறிய குறைபாடு என்ன வென்றால் IVP4  4 *3  அளவுள்ள எண்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முகவரி இப்போது 8 *4  அளவுள்ள எண்கள்  மூலம் வடிவமைக்கப்படும்  மேலும் இது hexadeciaml  எண்கள் ஆகும். இந்த எண்களை நினைவில் கொள்வது சற்று கடினம்.

செவ்வாய், 5 ஜூன், 2012

ஒற்றன்

பொன்னியின் செல்வன்   - ஆழ்வார்கடியான்  ஒரு புரியாத புதிர்

தலைப்பை பார்த்துவிட்டு இங்கே வந்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா ? அது இன்ப அதிர்ச்சியா ? இல்லை கடுப்பில் வந்த அதிர்ச்சியா ?  என்பதை இபோதைக்கு ஒத்தி வைத்துவிட்டு பதிவை படித்துவிட்டு அப்புறம் பின்னுட்டம் பகுதியில் உங்கள் கொலைவெறியை தீர்த்துக்கொள்ளவும்.பொன்னியின் செல்வன் நாவலை  படிக்காதவர்களை படிக்க வைக்கும்  ஒரு சிறிய முயற்ச்சி.
பொன்னியின் செல்வன் படித்து முடித்ததிலிருந்து அதைப்பற்றி ஏதாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற தீ என்னுள் கனன்று கொண்டிருந்தது. அதற்கான நேரம் இப்போது தான் கிடைத்தது. சரி மொக்க போட்டது போது விசயத்துக்கு வான்னு நீங்க சொல்லறது தெரியுது... இனிமேலும் உங்கள கடிக்க மாட்டேன் தொடர்ந்து படிக்கவும்.

பொன்னியின் செல்வன் சரித்திர நாவலின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று தான் இந்த ஆழ்வார்கடியான். கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணிப்பவர்கள் இருவர், அவர்களில் ஒருவன் கதையின் நாயகனாக அறியப்படும்  வாணர்குல வீரன்  பொன்னியின் செல்வனின்(அருள்மொழி வர்மன்)   அண்ணன் ஆதித்த கரிகாலனின் நண்பன் வல்லவரையன் வந்தியத்தேவன். கதையின் பிற்பகுதியில் இந்த வந்தியதேவன் அருள்மொழி வர்மனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவனுக்கும் உயிர் தோழனாகிறான்.  மற்றொருவன்  வைஷ்ணவத்தை வெறித்தனமாக பின்பற்றும் ஆழ்வார்கடியான்.கல்கி அவர்கள் அழ்வார்கடியானின் தோற்றத்தை மிகவும் அழகாக   இவ்வாறு விவரிக்கிறார் "கையில் ஒரு குறுந்தடியும், தலையின் பின்புறத்தில் ஒரு சிறிய குடுமியுடன்,  சற்று குள்ளமான உருவம்". இதன் பிறகு ஆழ்வார்கடியான் பாத்திரம் நாவலில் வரும்போதெல்லாம் அவர் உருவம் நம் கண்முன் வந்து செல்வதை தவிர்க்க முடியாது.

 இந்த இரு காதப்பதிரங்களும்(வந்தியதேவன் ,ஆழ்வார்கடியான்)  பல இடங்களில் ஒன்றையொன்று பரிகாசம் செய்வதும், ஒருவரை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பது போலவும் சொல்லப்பட்டிருக்கும்.  நாவலின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ஆழ்வார்கடியான் யார்? ஏன் கதை முழுவதும் வந்தியத்தேவன் மற்றும் பலரையும் பின்தொடர்ந்து பல ரகசியங்களை அறிந்து கொள்கிறார் என்று தெரியும். இந்த இரு கதாபத்திரங்களின் உதவியால் தான், எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து சோழர்களின் வரலாற்றிலே முக்கியமான அரசனும்  தெற்கு ஆசியாவில் வெற்றிக்கொடி நாட்டியவனும், காலத்தால் அழியாத தஞ்சை பெரிய கோவிலை கட்டியவனுமான இராஜராஜ சோழன் சோழ அரசை காப்பற்றினான்.

நாவலின் ஆரம்பத்தில் ஆழ்வார்கடியான்  வைஷ்ணவத்தை வெறித்தனமாக பின்பற்றுபவராகவும், சைவர்களுடன் தர்க்கம் புரிபவராகவும் சொல்லப்படிருக்கும், அதன் பிறகு இலங்கையில் வந்தியதேவன் உடன் சேர்ந்து பொன்னியின் செல்வரை சோழ தேச தலைநகருக்கு கொண்டுவர அவர் செய்யும் முயற்சிகளும் அதில் தோல்வியடைந்து  வந்தியதேவனையும் , பொன்னியின் செல்வரையும் விட்டுவிட்டு தமிழகம் வந்து மீண்டும் அவர்களை அடைந்து அருள்மொழி வர்மர் அவருடைய தந்தை சுந்தர சோழனை அடையும்  வரையும்  உடன் இருப்பார்.

அதன் பிறகு   நாட்டில்  நடைபெறும் பல  குழப்பங்களில் இருந்து அரசை காப்பற்ற அவர் எடுக்கும் பல முயற்ச்சிகள் அபாரமானவை. இறுதியில் சுந்தர  சோழரால் சந்தேகபடும் போதுதான் மற்றவர்களுக்கு இவர் ஒரு ஒற்றன் என்பது அநிருத்த பிரம்மராயர் மூலம் தெரியவரும்.இதற்கிடையில் ஆழ்வார்கடியான், கதையின் வில்லியாக அறியப்படும் நந்தினியின் அண்ணன் என்று அறிய வரும் போது அவர் மீது ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க இயலாது. நந்தினியை சோழ தேசத்தை கைப்பற்றும் முயற்ச்சியில் இருந்து விடுவிக்க எவ்வளவோ முயற்ச்சி செய்தும் தோல்வியடைவது பரிதாபத்திற்குரியது.

மொத்தத்தில் ஆழ்வார்கடியான் கதாப்பாத்திரம் இந்த நாவலி படிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை.மேலும் சில கதாபாத்திரங்களை பற்றி வரும் பதில் பார்ப்போம்.

திங்கள், 4 ஜூன், 2012

இரயில் பயணங்களில் - பெங்களூர் to காட்பாடி

நான் பெங்களூரில் இருந்து காட்பாடி செல்வதற்கு பெரும்பாலும் கிருஷ்ணராஜபுரத்திலிருந்து  காலை லால்பாக் விரைவு  இரயிலில் ஏறுவது வழக்கம்.
எப்போதுமே நான் முன்பதிவு செய்துள்ள இருக்கையில் யாரவது உட்கார்ந்து இருப்பார்கள். அவங்களை எந்திருக்க வச்சிட்டு நாம உடகாரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.கொஞ்சம் கூட எந்திருக்க மனசே இல்லாம இது உங்க சீட்டா? அப்படின்னு கேட்டுகிட்டே எவ்வளவு மெதுவா எழுந்திருக்க முடியுமோ அவ்வளோ மெதுவா எழுந்திருப்பானுங்க. இன்னும் சிலபேர் அவனுங்களும் முன்பதிவு செஞ்சிருப்பானுங்க அப்படியிருந்தும் நம்ம சீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு அவங்க சீட்டுல போய் உட்கார சொல்லுவாங்க, அங்க போய் பார்த்தா அது ரென்னு பேருக்கு நடுவுல இருக்கும், அந்த ரெண்டு பேரோட சைச பார்த்த உடனே நமக்கு பீதி கெலம்பீடும். போனாப்போவுதுன்னு   உட்கார்ந்து விட்டோம் அவ்ளோதான் இறங்கரதுக்குள்ள நம்ம ரெண்டு தோள் படையும் நசுங்கி போயிருக்கும்.
ஒருவேளை ஓர சீட்டா இருந்ததுன்னா போற வரவனுங்க இடிச்சியே கொன்னுடுவானுங்க. எப்பவுமே ஜன்னலோர சீட்டைத்தான் முன்பதிவு செஞ்சிட்டே போவேன் ஆனா ஒரு நாள் கூட அந்த சீட்டல உட்கார முடியாது. சார் பேமலியோட வந்திருக்கோம் , சார் வயசானவங்க இருக்காங்க அப்படி இப்படி ன்னு  ஏதாவது ஒரு காரணத்தால வேற சீட்டுல பொய் உட்கார வேண்டி இருக்கும். அப்பாட ன்னு எதோ ஒரு இடத்துல உட்கார்ந்த பிறகு அடுத்த தொல்லைகள் ஆரம்பிக்கும். பக்கத்தில உட்கார்ந்துகிட்டு எப்படித்தான் கண்டுபிடிபாங்க்களோ தெரியாது , சார் காட்பாடி இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு, இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு அப்படின்னு நொய் நொய் ன்னு கேட்டுகிட்டே வருவானுங்க. இந்த தொல்லை தாங்காம தான் பட்டு கேட்கிறோமோ  இல்லையோ காதுல mp3 player மாடிக்க வேண்டியது, அப்படியும் விடமாட்டனுங்க, தட்டி கேட்க வேண்டியது கேட்பானுங்க.
ஆனா இவ்வளவு தொல்லையில் ஒரே ஒரு நல்லது என்னன்னா, மூனே கால் மணி நேரம் போவதே தெரியாது.

அடுத்த பதிவில் சந்திப்போம் ................

எச்சரிக்கை  : இந்த பதிவிற்கான வரவேற்பை பொறுத்து மேலும் இதை சார்ந்த பதிவுகள் எழுதப்படும்.





வெள்ளி, 1 ஜூன், 2012

yum -(Redhat ,Federo ,CentOS ) தானியங்கி மென்பொருள் நிறுவி

லினக்ஸ் இயங்கு செயலி பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புதிய மென்பொருள்களை நிறுவதுதான். அதுவும் (installation from source )  எனப்படுகின்ற முறையில் மென்பொருள் நிறுவ முற்படும் போது, பல்வேறு துணை மென்பொருள்களை
நிறுவச்சொல்லி  கடுப்பேற்றும்.  ஒவொரு துணை மென்பொருளையும் தேடி கண்டுபிடித்து நிறுவுவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்லாமல்
அதிக நேரமும் செலவிட வேண்டிவரும்.

லினக்சில்  மென்பொருள் மூன்று முறையில் நிறுவப்படுகின்றது.
1 . installation from source  
  மிகவும் கடினமான முறை , இதில் பயனரே compile  மற்றும்  install எனப்படுகின்ற நிறுவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
2 . RPM  Installation 
  மேற்சொன்ன முறையை விட சற்று எளிதான முறை, ஆனால் துணை மென்பொருள்களை நீங்களே தான் கண்டுபிடித்து நிறுவவேண்டும்.
3 . yum  Installation 
    மிகவும் எளிதான முறை இதில் பயனர் எந்த வேலையும் செய்ய தேவையில்லை,
    இந்த yum  மென்பொருள் மற்றும் துணை மென்பொருள் ஆகியவற்றை தானே கண்டுபிடித்து நிறுவிடும்.

இந்த yum  வசதியானது Redhat ,Federo ,CentOS ,RHEL போன்ற Redhat  வகை  இயங்கு செயலியில் மட்டுமே காணப்படும்.
debiean  வகை இயங்கு செயலியில் Yum  பதில்  apt -get எனப்படுகின்ற வசதி காணப்படும். yum  வசதி மூலம் நீங்கள் மென்பொருள் நிறுவும் போது,
உங்கள் கணினியில் ஏற்கனவே அந்த மென்பொருள் இருந்தால் அந்த மென்பொருளின் புதிய பதிப்பை தேடி நிறுவும்.
இவ்வாறு புதிய பதிப்பை நிறுவும் போது தேவைப்பட்டால் உங்கள் கணினியில் உள்ள பழைய பதிப்பை அழித்துவிடும்.

முன்னேற்பாடுகள்:
yum  வசதி தடையின்றி இயங்குவதற்கு உங்கள் கணிபொறி இணையதள இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் கணினி proxy  முறையில் இணையதள இணைப்பு பெற்றிருந்தாலும் இது தடையின்றி இயங்கும்.

Yum  மூலம்   மென்பொருளை நிறுவ :
# Yum install software name

ஒருவேளை உங்களுக்கு  Yum க்கான  software name  தெரியவில்லை என்றால்
#Yum search software name
இது நீங்கள் கொடுத்த software name  க்கு இணையான Yum  software name -களை  கொடுக்கும், இதை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக 
தேவையான மென்பொருளை நிறுவலாம்.


(தொடரும்)

வியாழன், 31 மே, 2012

பெங்களூர் - கடலூர் - நாகூர் பயணிகள் ரயில் சேவை ஜூலை 1 தேதி முதல் தொடக்கம்

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட, பொதுமக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் மற்றும் நாகூர் இடையிலான ரயில் சேவை வருகின்ற ஜூலை 1 தேதி முதல்  இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிகாலையில் நாகூரில் இருந்து புறப்படும் பயணிகள் இரயில் கடலூர் துறைமுகம் , வடலூர் , விருத்தாசலம், ஆத்தூர் , சின்ன சேலம் , சேலம் , ஓசூர்  வழியாக பெங்களூரை மாலை சுமார் 6 .30  மணியளவில் சென்றடையும்.
 மறுமார்கத்தில்  பெங்களூரில் இருந்து காலை 7 .30  மணிக்கு புறப்படும் இரயிலானது ஓசூர் , சேலம், சின்ன சேலம், ஆத்தூர், விருத்தாசலம், வடலூர், கடலூர் துறைமுகம் வழியாக நாகூரை மாலை சென்றடையும்.
இது நிச்சயமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு இனிய செய்தியாக இருக்கும்.
இரயில் சேவையில்   பல ஆண்டுகளாக  மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்றால் அது கடலூர் மாவட்டமாக தான் இருக்கும். அதுவும் கடலூரிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால் அந்த கொடுமையை சொல்லி மாளாது  அதை அனுபவித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும், அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் என்றால் பெங்களூர் செல்லும் பயணிகள் பாடு திண்டாட்டம் தான். இந்த அறிவிப்பின் மூலம் பல ஆயிரம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.