நான் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வதனால் அது பற்றி வரும் செய்திகளை தேடித் தேடி படிப்பேன் அவ்வாறு படித்தவைகளில் முக்கியனான சிலவற்றை மற்றவர்களுக்கும் இந்த பதிவின் மூலமாக தெரிவிப்பதில் நமக்கு ஒரு திருப்தி. அந்த வகையில் இன்று தட்கல் இருக்கை முன்பதிவு நேரம் பற்றிய அறிவிப்பை பார்ப்போம்.
தட்கல் முன்பதிவு காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வருகின்ற ஜூலை ௰ம் தேதி முதல் நடை முறைக்கு வருகிறது. இதன் மூலம் செற்வர் லோடை கொஞ்சம் குறைக்கலாம். ஆமாம் சாதாரண இருக்கை முன்பதிவும் காலை 8 மணிக்கு அதே நேரத்தில் தட்கல் இருக்கை முபதிவும் அதே நேரத்தில் இருப்பதால் செற்வர் லோட் அதிகமாகி என்னதான் விரைவு இனைய இணைப்பு இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இருக்கை முன்பதிவு செய்ய முடியாமல் போய்விடுகிறது. இப்போது தட்கல் முன்பதிவை 10 மணிக்கு மாற்றியதன் மூலம் சர்வர் லோட் ஐ கொஞ்சம் குறைக்கலாம்.
மேலும் 10 மணி முதல் 12 மணி வரை authorized dealers யாரும் தட்கல் இருக்கை முன்பதிவு செய்ய முடியாது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது, இது மேலும் மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும். பெரும்பாலான இருக்கைகளை இவர்களே முன்பதிவு செய்து கொண்டு கொள்ளை விலைக்கு விற்பார்கள். இனிமேல் அது முடியாது.
மொத்தத்தில் பயணிகளுக்கு நல்லது நடந்தால் சரிதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக