நகரங்களில் அதுவும் சென்னை , பெங்களூர் போன்ற நகரங்களில் வாழும் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ரொம்ப கடுப்பா இருக்கு... எதுக்கு எடுத்தாலும் பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எனப்படுகின்ற பல்பொருள் வணிக அங்காடி ஒன்றே கதி என கிடக்கிறார்கள். இந்த கார்பரேட் நிறுவங்களும் அதன் ஊழியர்களுக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அளவிற்கு கூப்பனை வேற குடுதுடரானுங்க ... அவனுங்களுக்குள்ள என்ன லிங்க்கோ .... இந்த மாதரி கூப்பன் எடுத்து வரவனுங்கள கூட சரி போனாப் போவுதுன்னு மன்னிச்சி விட்டுடலாம் ...
ஆனா சும்மா 2 ரூபாய்க்கு கருவேப்பிலை வாங்கரதுக்கூட அங்க வந்து வரிசையில் நின்னு வாங்கிட்டே வரவங்கள என்னன்னு சொல்லறது... ஒரு முறை நண்பர் ஒருத்தர் கூபிட்டாருன்னு நானும் அந்த பல்பொருள் வணிக அங்காடி போனேங்க... . அங்க நான் பார்த்த காட்சி என்னை அப்படியே கண்கலங்க வைச்சிட்டுது....ஆமாங்க அங்க ஒருத்தன் ஒரே ஒரு கோழி முட்டை வாங்க அந்த கடைக்குள் வந்து அதற்கு பில் போட வரிசையில் நிக்குறான் ... இன்னும் ஒரு குடும்ப தலைவி அரை லிட்டர் பால் மாறும் ஒரு பிஸ்கட் பக்கெட்க்கு பில் போட வரிசையில் நிக்குது.... இதை விற்பனை செய்வதற்கே தெருவின் மூலை முடுக்கெல்லாம் சிறிய கடைகளை வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் பெரும்பாலானவர்களை வாழ வைபதற்காகவாவது அவர்களிடம் வாங்க வேண்டாமா? . ரோட்டோரம் கடை வைத்திருக்கும் காய்கறி மற்றும் பழம் விற்பவர்களின் பாடு இன்னும் சொல்ல முடியாதது இதற்கும் அவர்கள் தின வட்டி மற்றும் மீட்டர் வட்டிக்கு எல்லாம் வாங்கி பிழைப்பு நடத்துபவர்கள். வெறும் கொத்துமல்லி . கருவேப்பில்லை வாங்க பல்பொருள் வணிக அங்காடி செல்லாமல் இவர்களிடம் வாங்கலாமே....
இதை ஏற்கனவே பல பேர்கள் பலவிதமாக சொல்லிவிட்டார்கள் ... நான் எனக்கு தெரிந்த விதத்தில் சொல்கிறேன் அவ்வளவுதான்....
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் ,முட்டை , மளிகை பொருட்கள் போன்றவைகளையாவது அவர்களிடம் வாங்கலாமே!..... அதுவும் சென்னை , பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வாழ மிகவும் சிரமப்படும் மக்களை ஓரளவிற்காவது முன்னேற்றும்... எதற்கெடுத்தாலும் வணிக வளாகங்களை நோக்கி ஓடும் இளைய சமுதாயம் தன் இன மக்களையும் ஒருகணம் சிந்தித்து இது போன்றவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற உத வேண்டும்.
நல்லக்கருத்து.
பதிலளிநீக்குஅதிகம் வாங்க வேண்டும் என்றால் தான் சூப்பருக்கு போவேன்.
கறிவேப்பில்லை வாங்க எல்லாம் சூப்பருக்கு போவது வெட்டி பந்தா தான்.
கீரை,பழங்கள்,வேர்க்கடலை என நடைப்பாதைக்கடைத்தான், ரயில்வே ச்டேஷன் வழியிலெ இதெல்லாம் கிடைத்துவிடும்.
nanri .....
பதிலளிநீக்குunmai