திங்கள், 18 ஜூன், 2012

சிவகாமியின் சபதம் - பொன்னியின் செல்வன் ஓர் ஒப்பீடு


எப்படியோ ஒருவழியாக கடந்த 10  மாதங்களாக  பொன்னியின் செல்வன் நாவலை  படித்து முடித்து விட்டேன். அதனால் ஏற்பட்ட ஒரு ஆர்வம் கல்கியின் மற்றுமொரு சரித்திர நாவலான சிவகாமியின் சபதம் நாவலை படிக்க தூண்டியது விளைவு பெங்களூரில் இருந்தாலும் உடுமலை.காம் இணையதளத்தில் முன்பதிவு  செய்து VPP  மூலம் புத்தகத்தை பெற்று படிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.சும்மா சொல்லகூடாது உடுமலை.காம் புத்தகத்தை சொன்னபடியே அனுப்பி விட்டார்கள் ... எனக்குதான் அந்த அளவிற்கு நம்பிக்கை இல்லை ... அதற்காக உடுமலை.காம் இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். சரி இப்ப என்ன சொல்ல வரன்றிங்களா இதோ சொல்லிடறேன்...

பொன்னியின் செல்வன் நாவலைப்போல சிவகாமியின் சபதமும் உண்மையான  சரித்திர சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதில் சில கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து புனையபட்ட நாவலாகும். ஆனால் அதன் சரித்திர நிகழ்வுகளை கொஞ்சமும் மிகைப்படுத்தியோ அல்லது கற்பனையான சம்பவங்களை சேர்த்தோ எழுதவில்லை என்று திரு.கல்கி அவர்களே கூறுகிறார்கள். பொன்னியின் செல்வன் சோழர்களின் பொற்காலங்களில் ஒன்றான இராஜராஜனின் வாழ்க்கை சம்பங்களை அடிப்படையாக கொண்டது. சிவகாமியின் சபதமோ பல்லவர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத புகழுடன் விளங்கிய மன்னனான மகேந்திர பல்லவன் மற்றும் அவனுடைய மகன் மாமல்லன் என்கின்ற நரசிம்ம வர்மன் ஆகியவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படியாக  கொண்டது.


இராஜராஜனின் காலத்தில் பல்லவர்கள் சோழர்களின் ஆளுமைக்குட்பட்டு  அவர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக வாழ்ந்து வந்தனர். மகேந்திர பல்லவன் காலத்தில் சோழர்கள் குறுநில மன்னர்களாகி அவர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்து வந்தனர். இருவரது காலத்திலும் காலத்தால் அழியாத கோவில்களையும் சிற்பங்களையும் உருவாகினார்கள். மகேந்திர வர்மன் மாமல்லபுரம்  சிற்பங்கள் மற்றும் கோவில்களையும், இராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலையும் எழுப்பினார்கள்.


பொன்னியின் செல்வன்  நாவலின் வில்லியான  நந்தினியை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்  சிவகாமியின் சபதமோ சிவகாமியை சுற்றி நகரும். இரண்டு  நாவல்களின் காலத்திலும் புத்தமதம் பிரதானமாக  இருந்து பிறகு சைவ மதம் தழைக்க ஆரம்பித்த தருணம்
இந்த இரு சரித்திர நாவல்களுக்கும் உள்ள ஒரு வேற்றுமை என்னவெனில் பொன்னியின் செல்வனோ ஆட்சியை  பிடிக்க   உள் நாட்டில் ஏற்படும் கலகத்தை  முறியடிக்கும் விதமாக இருக்கும் மாறாக சிவகாமியின் சபதம் எதிரி நாட்டின் படையெடுப்பில் கவர்ந்து சென்ற பெண்ணை திரும்பவும் கொண்டுவரும் விதமாக முடிக்கப்பட்டிருக்கும்.பொன்னியின்  செல்வனோ அல்லது சிவகாமின் சபதமோ படிக்கும் பொது விறுவிறுப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லை, படிக்க படிக்க ஆவலை  தூண்டும் நாவல்களாகும்.

சிவகாமின் சபதம் பற்றி மேலும் சில பதிகளை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் போகப்போக மேலும் சில பதிவுகள் இது தொடர்பாக வெளிவரும்.








4 கருத்துகள்:

  1. நான் இரண்டு நாவலையும் படித்து விட்டேன், கல்கி எழுதும் பொழுது மட்டும் அவர் பிர்மாவை போல் தெரிகின்றார் இக்கால எழுத்தாளர்கள் யாரும் இவருக்கு இணையாக பார்க்ககூட இயலாது
    கதை ஓடத்தின் விறுவிறுப்புக்கு சினிமா படம் கூட ஈடாகாது,
    பொன்னியின் செல்வன் கதை மட்டும் 2 வரங்கள் ஆனது என்னக்கு படித்து முடித்த பின்பு எனக்குள் எழுந்த எண்ணங்கள் பல, அதன் பதிப்பு இன்றளவிலும் என்னக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
    அதை போலவே சிவகாமியின் சபதம் கதை மிகசிரப்பகும்.
    இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் பொன்னியின் செல்வன் கதை படித்த பின்பு உங்களுக்குள் ஒரு சோகம் குடிகொல்வதை அறியலாம், அனால் சிவகாமியின் சபதம் அப்படிப்பட்ட பெரும் தகத்தை ஏற்படுத்துவது இல்லை.
    நமது தமிழ் பண்பாடு எப்படிப்பட்ட சிறப்பைகொண்டது என்பதை உலகிற்கு பறைசாற்றும் ஆதாரங்கள் இவை.
    பேணி காக்கவேண்டிய வரலாற்று பொக்கிஷம்.
    இரண்டு கதைகளின் ஒரிஜினல் பதிப்புகிடைதால் மிகசிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ....

      ஆம் நிச்சயமாக போற்றி பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் கல்கியின் வரலாற்று சரித்திர நாவல்கள்......

      நீக்கு
  2. சிவகாமியின் சபதம் ஒரு முழுமையான காதல் கதை. மாமல்லன்னுக்கும் சிவகாமிக்கும் உள்ள கண்ணியமான காதலையும், சிவகாமியின் சபதத்தால் ஏற்பட்ட விளைவையும் சுவாரசியமாக கல்கி விளக்கியிருக்கிறார். பொன்னியின் செல்வன் சோழ பேரரசில் சுந்தர சோழனுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியையும் சூழ்ச்சிகளையும் பரபரப்பான திருப்பங்களோடு சொல்லி இருக்கிறார்.
    பார்த்திபன் கனவையும் படித்து பாருங்கள். இன்னும் விருவிருப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.விக்டர் !..... பார்த்திபன் கனவுதான் நான் படித்த கல்கில்யின் முதல் புத்தகம் ... சிவகாமியின் சபதம் படித்த பிறகு மீண்டும் பார்த்திபன் கனவு படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
      நேரம் கிடைத்தால் வேங்கையின் மைந்தன் படித்துபாருங்கள் - இது ராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழன் பற்றியது ... பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் மற்றும் குந்தைவை கதாபாத்திரங்கள் வயது முதிர்ந்த வேடங்களில் வருவார்கள் ....

      நீக்கு