புதன், 1 ஆகஸ்ட், 2012

வேங்கையின் மைந்தன்- முதலாம் இராஜேந்திரன்

வேங்கையின் மைந்தன் 
       முதலாம் இராஜேந்திரனுக்கு மிகவும் பொருத்தமான பெயர், அதையே தான் எழுதிய வரலாற்று நாவலுக்கு தலைப்பாக இட்டிருப்பது அந்த மன்னனுக்கு மேலும் புகழ் சேர்ப்பது போலாகும். ஆம் நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது 1960 களில் வெளிவந்து இந்திய அரசின் சாகித்ய அகடமி விருது பெற்ற முதாலாம் இராஜேந்திர சோழனின் வரல்லாறை கூறும் நாவல் வேங்கையின் மைந்தன். முதலாம் இராஜேந்திரனுக்கு வயது ஆகிவிட்டதால் அவரை கதையின் நாயகன் ஆக்காமல் கொடுமபாளூர் இளவரசனை(சோழர் படை தளபதி) கதையின் நாயகன் ஆக்கியுள்ளார். திரு.அகிலனின் எண்ணத்தில் உதித்து எழுத்தாக வெளிவந்தது. 

" தாய் 8 அடி  பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" போன்ற எத்தனை தமிழ் பழமொழிகள் உள்ளதோ அதை அத்தனையும் உதாரணமாக  முதலாம் இராஜேந்திரனுக்கு சொல்லலாம். ராஜராஜன் ஆட்சிக்கு வந்ததே நாற்பது வயதிற்கு மேல் தான் அதன் பிறகு  அவன் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருந்தாதால் அவனை  அடுத்து பதவிக்கு வரவேண்டிய அவன் மகன் முதலாம் இராஜேந்திரனும் ஆட்சி கட்டிலில் ஏற கிட்டதட்ட 5o  வயது ஆகிவிட்டது. ஆனாலும் தந்தையின் வழி நின்று இன்னும் சொல்லபோனால் அவரைவிட ஒருபடி மேலே சென்று ஆட்சியை திறம்பட செய்து பல நாடுகளை கைப்பற்றி புலிக்கொடியை பறக்க விட்டவர். அவரின் திறமைக்கு இன்றும் சான்றாக விளங்குவது கங்கை கொண்ட சோழபுரம். ஒருமுறை அதை நேரில் சென்று பாருங்கள் அதன் பிரமாண்டம் என்னெவென்று உங்களுக்கு புரியும். 
கதை சுருக்கம்:
சோழர்களின் கீழ் அரசாண்ட பாண்டியர்கள் சிங்கள மன்னன் மகிந்தனுடன் சேர்ந்து சோழர்களை போரில் வெல்ல துடிக்கின்றனர். மேலும் வடக்கே சாளுக்கிய மன்னனும் சோழர்கள் மீது படையெடுத்து வருகிறான். பாண்டியர்களை தூடிவிடும் சிங்களர்களுக்கு பாடம் புகட்டினால் பாண்டியர்கள் தானாக அடங்கி விடுவார்கள், மேலும் ராஜராஜன் இறக்கும் தருவாயில் தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும் சிங்களர்கள் மீது படை  எடுத்து சென்று காலங்காலமாக சிங்களவர்களின் பிடியில் இருக்கும்  மணிமுடியையும்  கொண்டுவந்து அதை தன்  மகனுக்கு முடிசூட்டி பாண்டிய நாட்டை அவனிடம் ஒப்புவிக்கவும் முடிவு செய்கிறார் . இதற்கு பொருத்தமானவன் தனது தாய் வழி சொந்தத்தில் வந்த கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ என்று முடிவு  செய்து அவனுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு வந்தியதேவனை(பொன்னியின் செல்வனில் வரும் அதே வந்தியத்தேவன் தான் ஆனால் கிட்டத்தட்ட ௭௦ வயது முதிர்ந்த கிழவனாக தோற்றமளிக்கிறார்)  அனுப்புகிறார்.

சிங்கள மன்னன் மகிந்தனோ அமைச்சர் மெய்கீர்த்தி பிடியில் இருக்கிறார், மேலும் அவன் வைத்தது  அங்கு சட்டமாக இருக்கிறது. இதற்கிடையில் சோழ படைகள் இலங்கையை வென்று மன்னன் மகிந்தன் அவன் மனைவி மற்றும் அவரது மகள் ரோகினி சிறைபடுத்தப்படுகிரார்கள். மகிந்தனின் மகன் காசிபன்  , அமைச்சர் ஆகியார் தப்பித்து சென்று சோழர்களை பழி வாங்க துடிக்கின்றனர்.இதற்கிடையில் மகிந்தனின் மகள் ரோகினி இளங்கோ மீது காதல் கொள்கிறாள். ரோகிணியின் உதவியுடன் பாண்டிய மணிமுடியை கண்டுபிடித்து மணிமுடி மற்றும் சிறைபடுதப்பட்ட மகிந்தன் குடும்பத்துடன் சோழர் படைகள் நாடு திரும்புகிறன. 
தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக