அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுபதற்கான போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
தேர்தலுக்கான தேதி வேறு அறிவிக்கப்பட்டுவிட்டது. கிட்டதட்ட அனைத்து பெரிய
கட்சிகளும் ஒவ்வொரு வேட்பாளர் பெயரினை அறிவிக்க கதிகலங்கி போயுள்ளது
காங்கிரஸ் கூடாரம்.மத்தியில் ஆட்சியில் இருந்தும் தங்களால் வழிமொழிந்த
ஒருவரை ஜனாதிபதியாக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அது
உள்ளது.இதன் காரணமா பெரும்பான்மை பலம் இல்லாததால் காங்கிரஸ் கூட்டணி
கட்சிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, எப்போதும் காங்கிரஸ்
கட்சிக்கு தொல்லை கொடுக்கும் அதன் கூட்டணி கட்சியான திர்னாமுள் காங்கிரஸ்
கட்சி தலைவி இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சீண்ட ஆரம்பித்துள்ளார்.
சோனியா காந்தியோ அவரின் தீவிர விசுவாசிகளில் ஒருவரும், கட்சியின் மூத்த
தலைவருமான பிரணாப்பை ஜனாதிபதியாக்கி விடலாம் என்று கனவு காண அதை உடைக்கும்
வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளார் மம்தா. அப்படி என்ன தீராத பகையோ
திரு.பிரணாப் மீது?.
மமதா அவர்கள் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்குடன் சேர்ந்து மூன்று பேர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளது. அவர்கள் முறையே திரு.மன்மோகன் சிங் , அப்துல் கலாம் மற்றும் சோம்நாத் சட்டர்ஜி. இதில் அப்துல் கலாம் பெயரை ஒருபோதும் காங்கிரஸ் தலைவி ஏற்றுகொள்ள மாட்டார், அடுத்தது திரு.மன்மோகன் சிங் அவர் பெயரும் நிராகரிக்கப்பட்டது ஏனென்றால் அது அடுத்த பதவி பிரச்சினையை ஏற்படுத்த கூடும்.மேலும் இருப்பது சோம்நாத் சட்டர்ஜி அவரையும் திரு.சோனியா அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
நிலைமை இப்படி இருக்க ஊருக்கு முன்பே நவீன் பட நாயக்குடன் சேர்ந்து சங்கமா பெயரை அறிவித்துவிட்டார் அதிரடி ஜெயலலிதா. சங்கமாவும் தன பழங்குடியின பின்புலத்தை வைத்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் ஆதரை கோரிவருகிறார். பாஜகவோ உள்கட்சி பூசலை தீர்க்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருப்பதால் இந்த விசயத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. காங்கிரசின் வியுகம் வெற்றி பெறுமா, ஜெயலலிதாவின் கூட்டணி கரை தேறுமா, பாஜாக தான் கரை சேருமா இல்லை மமதா முலாயம் சிங் கூட்டணி கனவு பலிக்குமா. என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.