புதன், 10 டிசம்பர், 2008

இரத்தத்தை உறிஞ்சும் கடன் அட்டை

இரத்தத்தை உறிஞ்சும் கடன் அட்டை

இது எனக்கு நேர்ந்த சம்பவம் அல்ல கொடுமை.ஆம் இன்றைய உலகில் நகர வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பது இந்த கடன்அட்டை. கவனமாக கையான்டால் இந்த கடன் அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றல்லாம் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்.என்னதான் கவனமாக கையாண்டாலும் ஒரு சில நேரங்களில் இந்த கடன் அட்டை நம்மை பதம் பார்த்துவிடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இனி என் வாழ்வில் நடந்த கொடுமைக்கு வருவோம். கிரடிட் லிமிட் எனப்படுகின்ற அதிகபட்ச கடன் தொகை ரூ.25000 ஆயிரங்கள் இருந்த போதும், நான் மாதா மாதம் செலவ‌ழிக்கும் தொகையோ 5000 க்குள்தான்.குறிப்பிட்ட அந்த மாதம் மட்டும் ஒரு 14000
செலவழித்து விட்டேன். இது நடந்த ஒரு வாரத்தில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) வந்ததது அதில் "நீங்கள் உங்களுடைய அதிகபட்ச செலவழிக்கும் தொகையை கடந்து விட்டீர்கள், எனவே உடனடியாக அந்த தொகையை மற்றும் 1000 அபராதம் ஆகியவற்றை செலுத்தினால்தான் நீங்கள் உங்களுடைய அட்டையை பயன்படுத்த இயலும்" என இருந்தது.
உடணே பதறி போன நான் "கஸ்டமர் கேர்" எனப்படும் வாடிக்கையாளர் உதவியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது.

உங்களுடைய அதிகபட்ச கடன் தொகை(கிரடிட் லிமிட்) ரூ.12000 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்கள்.உடனே நான்ஆகா மாடினார்கள் என நினைத்து.என்னுடை கிரடிட் லிமிட் குறைக்கும் பொது எனக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா? என்றேன்
கடுப்பாக.ஆனால் அவர்களே நாங்கள் 10 நாட்களுக்கு முன்பே தாபால் மூலமாக அனுப்பி விட்டோம் என்றனர்.

நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் இந்த பிரச்சினையை எங்கே கவணிப்பது என்று விட்டுவிட்டேன், மேலும் அந்த அட்டையை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.

இதில் யாரை குற்றம் சொல்வது. மாதாம் பில்லைமட்டும் கொரியர் மற்றும் எஸ்.எம்.ஏஸ் என அனுப்பும் இவர்கள் இது போன்ற‌ முக்கியமான செய்திகளை தெரிவிக்காத தெரிவிக்காத இவர்களையா? அல்லது எத்தணையோ வங்கிகள் இருக்க அந்த குறிப்பிட்ட வங்கியில் கடன் அட்டை பெற்ற என்ணையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக