செவ்வாய், 25 நவம்பர், 2008

உடல் உறுப்புகள் தானம்‍ தமிழகம் முன்னோடி

கடந்த சில நாட்களாக நாம் வழக்கமாக கேள்விப்படுகிற செய்தி, "இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தனர், அவர்களது உறவினர்கள்". இது எவ்வளவு பெரிய உதவி மனித குலத்திற்கு.யாருக்கும் பயனில்லாமல் மண்னுக்குள் மக்கவிருக்கும் மனித உறுப்புகளை அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம், அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்த பெருமையும். மேலும் அவர் மூலம் உங்கள் இறந்த உறவினரையும் நீங்கள் மறக்காமல் இருக்க வழி ஏற்பட ஒரு வாய்ப்பைக்
அமையும்.

பலவருடங்களாக மிக அரிதாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி. இப்போது பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதற்கு ஊன்றுகோலாக அல்லது முன்னோடியாக இருந்தது , ஒரு மருத்துவருடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.

ஒரு விபத்தில் அடிபட்டு மூலை செயல் இழந்துவிட்ட தன் மகன் இனிமேல் பிழைக்க வாய்ப்பு இல்லை என் தெரிந்து கொண்ட அந்த மருத்துவ தம்பதியினர். இதயத்திற்காக தவித்துக்கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு தானமாக கொடுக்க முன்வர அதனைத்தொடர்ந்து, அந்த இதயத்தை சிறுமிக்கு பொறுத்த காவல் துறை முதல், மருத்துவமணை வரை அணைவரும் உதவி செய்து. சிறுமியை பிழைக்க வைத்தது அணைவரும் அறிந்ததே.

இதன் மூலம் மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்த மருத்துவ தம்பதியனரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

தன் ஒரே மகன் இறந்த துக்கத்திலும், ஒரு சிறுமியின் வாழ்க்கையில் ஓளியேற்ற வேண்டும் என் நினைத்த அந்த பெற்றோர்கள் நிச்சயம் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்கள் செய்த இந்த செயல் மூலம் அந்த சிறுமி மட்டுமல்ல பலபேர் இன்று பயன் பெறுகிறார்கள், மேலும் பலர் தமிழகத்தில் இறந்தவர்களின் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வருகிறார்கள்.

எந்த ஒரு நல்ல செயலுக்கும் சிறந்த தொடக்கம் தேவைப்படும். அந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த மருத்துவ தம்பதியருக்கு என் மணமார்ந்த பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக